மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த ஹிட்மேன் - ரோகித் சர்மாவுக்கு என்னதான் ஆச்சு?

ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட் ஆன வீரர்களில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
Rohit
RohitTwitter

16-வது சீசனின் 49-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பௌலிங்கை தேர்வு செய்ததை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். 1.5-வது ஓவரிலேயே துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில், 6 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் அவுட்டாக, அதனைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினார்.

பின்னர், 2.2-வது ஓவரில் தீபக் சாஹர் பந்துவீச்சில் 7 ரன்கள் எடுத்தநிலையில், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன், தீக்ஷனாவிடம் கேட்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து நேஹல் களமிறங்கிய நிலையில், 3 பந்துகளை மட்டுமே சந்தித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். இது ஐபிஎல் போட்டிகளில் அவருடைய 16-வது டக் அவுட்டாகும்.

இந்த டக் அவுட்டின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட் ஆன வீரர்களில், ஹிட்மேன் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

முன்னதாக, மொஹாலியில் கடந்த 3-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 46-வது லீக் போட்டியில், கேப்டன் ரோகித் சர்மா இதேபோல் 3 பந்துகளை சந்தித்து, ஐபிஎல் தொடரில் 15-வது முறையாக டக் அவுட் ஆகி 4-ம் இடம் பிடித்திருந்தார்.

Rohit sharma
Rohit sharmaMI twitter page

ரோகித் சர்மாவுக்கு முன்னதாக சுனில் நரேன், மந்தீப் சிங், தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 டக் அவுட்டுகள் எடுத்து இடம் பிடித்திருந்தனர். இந்த வரிசையில் 4-வது இடத்தில் இருந்த நிலையில், சென்னைக்கு எதிரான போட்டியில் 16-வது முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனையில் முதலிடம் பிடித்துள்ளார் ரோகித் சர்மா.

Rohit
ஒரே போட்டி: 2 சாதனைகள் படைத்த மும்பை இந்தியன்ஸ் - மோசமான சாதனையில் இணைந்த ரோகித், அர்ஷ்தீப் சிங்

வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்ரேலியாவை, ரோகித் தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில், தொடர்ந்து டக் அவுட்டாகி வருகிறார் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 4 தோல்விகளை சந்தித்தப்போது, கேப்டன் ரோகித் சர்மா நன்றாக ஓய்வெடுத்துவிட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு புத்துணர்வுடன் திரும்ப வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 1, 21, 65, 20, 28, 44, 2, 3, 0, 0 என்ற வரிசையிலேயே நடப்புத் தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் விதம் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com