\
Ben Stokes
Ben Stokes File Image

சென்னை அணிக்கு அடி மேல் அடி.. ”பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்” - ஃபிளெமிங் தகவல்!

காயம் காரணமாக சி.எஸ்.கே. வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு வாரம் விளையாட மாட்டார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தகவல் தெரிவித்துள்ளார்.
Published on

இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த சீசனில் ரூ.16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வந்த பென் ஸ்டோக்ஸ் முதல் இரு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கினார். அதன்பின் நடந்த நான்கு ஆட்டங்களை அவர் தவறவிட்டார்.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸின் நிலை குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''காயம் குணமாகாததால் பென் ஸ்டோக்ஸ் ஒரு வாரம் விளையாட மாட்டார். அவர் இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவுதான். ஆனால் நான் அதற்குள் செல்லமாட்டேன். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். குணமாவதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார். அதை குறை சொல்ல முடியாது. எனவே, அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை.

கேப்டன் தோனியும் முழுமையாக நலமுடன் இருக்கிறார். அவர் காயத்தை நன்றாக நிர்வகித்து வருகிறார். எப்போதும் அணிக்கு முதலிடம் கொடுப்பார் அவர். காயத்தால் பங்களிக்க முடியாது என்று தெரிந்தால், அவரே வெளியே அமர்ந்திருப்பார். அவரைப் பற்றி எந்த கவலையும் இல்லை" என்று ஃபிளெமிங் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com