தோற்றவர்கள் ஜெயிக்கிறார்கள்.. தலைகீழாக மாறும் புள்ளிப்பட்டியல்.. பிளே ஆஃப் வாய்ப்பு யார்? யாருக்கு?

முதல் பாதியில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவுசெய்து அசத்திய பல அணிகள், தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றன. அதனால் எந்த அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் என்றே சொல்ல முடியவில்லை.
ipl team captains
ipl team captainstwitter pages

தலைகீழாக மாறும் புள்ளிப்பட்டியல்.. பலமாக மாறும் போட்டி!

நடப்பு ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட லீக் சுற்றுபோட்டிகள் முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. குஜராத், சென்னை, லக்னோ, ராஜஸ்தான் அணிகளுக்கு இன்னும் 3 போட்டிகள் மிஞ்சியிருக்க, மற்ற 6 அணிகளுக்கு 4 போட்டிகள் இருக்கின்றன. முதல் பாதியில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவுசெய்து அசத்திய பல அணிகள், தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றன. அதனால் எந்த அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் என்றே சொல்ல முடியவில்லை.

குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்PTI

இதில் குஜராத் அணி மட்டுமே கிட்டத்தட்ட அரையிறுதியை சீல் செய்யும் நிலையில் இருக்க, மற்ற 3 இடங்களுக்கு மட்டும் சுமார் 6 அணிகள் பலத்த போட்டியில் இருக்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் மீதமுள்ள அந்த 3, 4 போட்டிகளில் மிகவும் முக்கியமானவைகள். அதனால், இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும். எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்..

கெத்து காட்டும் குஜராத்.. முதல் அணியாக சீல் செய்யும்!

மற்ற அணிகளை விடவும், அதிக புள்ளி வித்தியாசங்களுடன் குஜராத் டைட்டன்ஸ் முதல் இடத்தில் இருக்கின்றது. டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் மட்டும் தோல்வி என 16 புள்ளியுடன் டேபிள் டாப்பராக உள்ளது. அந்த அணியின் ஆட்டமும் ஒரு சாம்பியன் அணிக்கான ஆட்டம் போலவே உள்ளது. வலுவான லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான அந்த அணி மிகத் தரமான வெற்றியை பதிவு செய்தது. கடைசி நேர பரபரப்புகள் இல்லாமல் மிக எளிதாகவே இந்த வெற்றிகளை பதிவு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்gt twitter page

குஜராத் டைட்டன்ஸ் அணியானது எஞ்சிய 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் போன்ற மூன்று அணிகளுக்கு இடையே மோதவுள்ளது. இதில் ஒரு போட்டியை வென்றால் கூட டைட்டன்ஸ் அணி, தன்னுடைய இடத்தை சீல் செய்துவிடும். டைட்டன்ஸ் அணி 0.951 ரன் ரேட் வைத்துள்ளதால் பிளே ஆஃப் வாய்ப்பு அந்த அணிக்கு மிஸ் ஆக வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம். முதல் இரண்டு இடங்களை தக்க வைக்குமா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

ஓகே தான்.. ஆனால் ஜாக்கிரதையா இருக்கணும்.. இதான் சென்னை அணியின் நிலை!

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டி ரத்தாகி ஒரு புள்ளியை பகிர்ந்தும் என மொத்த 13 புள்ளிகளுடன் டேபிளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சில போட்டிகளுக்கு முதல் இடத்தை பிடித்திருந்த போதும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக அடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவியதும் லக்னோ அணிக்கு எதிராக வெற்றி வாய்ப்பு இருந்தும் மழையால் ஒரு புள்ளி கைவிட்டு போனது பின்னடைவாக போனது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றிதான் கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பை அதிகரித்து இருக்கிறது.

csk
cskcsk twitter page

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கடைசி 3 போட்டிகளில் 2 முறை டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும், ஒருமுறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும் மோதவிருக்கிறது. அதில் டெல்லி ஒரு போட்டியிலும் மற்றும் கொல்கத்தா அணி மற்ற போட்டியிலும், சென்னை சேப்பாக்கத்தில் விளையாட விருக்கின்றன. இந்த இரு அணிகளுக்கு எதிராகவும், சென்னை அணி சிறப்பான ரெக்கார்ட் வைத்துள்ளதால், 2 போட்டிகளில் வெற்றிபெறும் சூழல் சிஎஸ்கே-விற்கு சிறப்பாகவே இருக்கிறது. இருப்பினும் சென்னை, எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும், ஏனென்றால் சேப்பாக்கத்தில் சரி சமமான வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது சிஎஸ்கே. அடுத்து விளையாடவுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வென்றால் மட்டுமே சிக்கல் இல்லாமல் பிளே ஆஃப் சுற்றில் நுழையலாம். மூன்றிலும் வென்றால் இரண்டாவது இடத்தை தக்க வைக்கலாம்.

கடைசி 6 போட்டிகளில், 5-ல் தோல்வி.. பரிதாப நிலையில் ராஜஸ்தான்! மற்ற அணிகள்?

மற்ற அணிகளை பொறுத்தவரையில் லக்னோ அணி 11 புள்ளிகளுடனும், 5 வெற்றிகள் பெற்று ராஜஸ்தான், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் முதலிய அணிகள் 10 புள்ளிகளுடன் இருக்கின்றன. இருப்பினும் கடைசி போட்டிகளில், அனைத்து அணிகளும் வெற்றி, தோல்வி என ஏற்ற இறக்கத்தையே சந்தித்துள்ளன. அதுவும் மற்ற அணிகளை விடவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலையானது கவலைக்கிடமாகவே இருந்துவருகிறது. முதல் 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வியென வலுவான அணியாக தெரிந்த ராஜஸ்தான், கடைசி 6 போட்டிகளில், 5-ல் தோல்வியை சந்தித்து பரிதாபமான நிலையில் இருக்கிறது.

Rajasthan Royals
Rajasthan RoyalsRajasthan Royals twitter page

மும்பை, ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை பொறுத்தவரையில் வெற்றி, தோல்வி என மாறிமாறி வருகின்றன. இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் நேருக்குநேர் ஒரு போட்டியில் மோதவிருக்கின்றன. அதில் வெற்றிபெறும் அணிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி மும்பை அணியானது குஜராத் மற்றும் லக்னோ அணிகளோடு மோதவிருக்கிறது. பெங்களூரு அணி குஜராத் மற்றும் ராஜஸ்தானோடு மோதவிருக்கிறது.

mi and rcb teams
mi and rcb teamsPTI

இந்தவரிசையில் லக்னோ அணி கூடுதலாக ஒருபுள்ளி எடுத்திருந்தாலும், தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்து வருகிறது. கேப்டன் கேஎல் ராகுல் இல்லாதது, அந்த அணிக்கு பெரிய பாதகமாகவே பார்க்கப்படுகிறது. க்ருணால் பாண்டியா கேப்டன்சியில் ஜொலிக்க மறுக்கிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியும் இந்த பந்தயத்தில் வலுவாக இருக்கிறது. இதற்கான வாய்ப்பும் சிறப்பாகவே இருக்கிறது, பஞ்சாப் அணியும் 2 போட்டிகளில் டெல்லியை எதிர்கொள்கிறது.

8 புள்ளிகளுடன் 3 அணிகள்! அடுத்தடுத்த போட்டிகளில் எதுவும் நடக்கலாம்!

கொல்கத்தா, டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் 3 அணிகளும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் இருக்கின்றன. தோல்வியையே சந்திருந்த இந்த அணிகள் தற்போது வீறுகொண்டு எழுந்துள்ளன. குறிப்பாக முதல் 5 போட்டிகளில் படுதோல்வி அடைந்து 10 ஆவது இடத்தை விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்த டெல்லி அணி கடைசி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று அசத்தி வருகிறது.

dc, srh, kkr teams
dc, srh, kkr teamstwitter page

கடைசி மூன்று இடங்களில் உள்ள அணிகளில் எந்த அணியாவது மீதமுள்ள 4 போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் முன்னேறும் வாய்ப்பிருக்கிறது. ஐபிஎல் தொடரானது பலமுறை, இந்த சாத்தியம் இல்லாதவற்றை கூட சாத்தியமாக்கியுள்ளது. இதனால் இந்த இறுதிச்சுற்றானது, நிச்சயம் ஒரு ரோலர் ஹோஸ்டராகவே இருக்கும் என்றால் மிகையாகாது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com