மிரட்டல் ஃபார்மில் ஆஸ்திரேலியா; சர்ப்ரைஸ் கொடுக்குமா ஆப்கானிஸ்தான்! முக்கிய போட்டியில் பலப்பரீட்சை!

போட்டி எண் 48: ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா சூப்பர் 8 பிரிவு: குரூப் 1 போட்டி நடக்கும் மைதானம்: அர்னோஸ் வேல் கிரவுண்ட், கிங்ஸ்டன், செயின்ட் வின்சென்ட் போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 23, இந்திய நேரப்படி அதிகாலை 6 மணி
aus vs afg
aus vs afgweb

இந்த உலகக் கோப்பையில் இதுவரை:

ஆப்கானிஸ்தான்: போட்டிகள் - 5, வெற்றிகள் - 3, தோல்விகள் -2, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் - 5 போட்டிகளில் 178 ரன்கள்

சிறந்த பௌலர்: ஃபசல்ஹக் ஃபரூக்கி - 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்

இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் பலரும் ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறும் என்று ஆருடம் கூறினார்கள். அந்த நம்பிக்கைக்கு ஏற்றதுபோல் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறது ரஷீத்தின் அணி. லீக் சுற்றில் நியூசிலாந்தை தோற்கடித்து அவர்களை சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையாமல் செய்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் தவிர்த்து மற்ற 3 அணிகளையுமே வீழ்த்தி 6 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்தது அந்த அணி. சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறியது. இந்தியா 181 ரன்கள் எடுக்க, அதை சேஸ் செய்த வங்கதேசத்தால் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

afghanistan
afghanistanpt desk

ஆஸ்திரேலியா: போட்டிகள் - 5, வெற்றிகள் - 5, தோல்வி - 0, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: டிராவிஸ் ஹெட் - 179 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 11 விக்கெட்டுகள்

விளையாடிய 5 போட்டிகளையும் வென்று மெர்சல் செய்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. குரூப் சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிராக மட்டும் கொஞ்சம் தடுமாறினார்கள். ஆனால் மற்றபடி அவர்களுக்கு இதுவரை எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியிலும் வங்கதேசத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் (DLS முறைப்படி) வீழ்த்தி புள்ளிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறார்கள்.

aus vs afg
’2K + 90ஸ் கிட்ஸ்’ எல்லாரும் காலி.. ‘மாலை டும்டும்’ பாடலுக்கு பின் கலக்கும் ‘கல்யாண கச்சேரி’ பாடல்!

மிரட்டல் ஃபார்மில் ஆஸ்திரேலியா... சமாளிக்குமா ஆப்கானிஸ்தான்?

ஆஸ்திரேலிய அணி தங்கள் வழக்கமான வித்தையை உலகக் கோப்பை அரங்கில் காட்டிக்கொண்டிருக்கிறது. ஹெட், வார்னர், ஸ்டாய்னிஸ் என 3 பேட்ஸ்மேன்கள் 150+ ரன்கள் விளாசியிருக்கிறார்கள். வேறு எந்த அணியிலும் இப்படி 3 வீரர்கள் முரட்டு ஃபார்மில் ஆடவில்லை. கேப்டன் மிட்செல் மார்ஷின் ஃபார்ம் மட்டுமே பேட்டிங்கில் ஒரே கவலையாக இருக்கிறது. மேக்ஸ்வெல் கூட கொஞ்சம் தேறத் தொடங்கிவிட்டார். பேட்டிங் எப்படியோ பௌலிங்கும் அப்படித்தான். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஜாம்பா எல்லோரும் போட்டி போட்டு விக்கெட் எடுக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்காத எல்லிஸும் கூட செம ஃபார்மில் இருக்கிறார். ஐந்தாவது பௌலராகப் பயன்படுத்தப்படும் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இருவரும் சேர்ந்து கூட 10 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்கள்.

australia
australiaweb

இப்படி ஒரு அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் எப்படி எழுச்சி பெறப்போகிறது என்பது தான் மிகப் பெரிய கேள்வி. பேட்டிங்கில் குர்பாஸ் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அதுவே அவருக்கு நெருக்கடியாகவும் அமையும். மற்ற பேட்ஸ்மேன்களும் ஓரளவு நல்ல பங்களிப்பைக் கொடுத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்கலாம்.

aus vs afg
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா சசாய், இப்ராஹிம் ஜத்ரான், குல்பதின் நைப், அஸ்மத்துல்லா ஓமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முஹமது நபி, ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.

rashid khan
rashid khan

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

aus vs afg
‘இதுக்கு ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து கிட்ட தோத்தே போயிருக்கலாம்’! WI-க்கு மரண அடி கொடுத்து வென்ற ENG!

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

ஆப்கானிஸ்தான் - ஃபசல்ஹக் ஃபரூக்கி: இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கும் ஃபரூக்கி, பவர்பிளேவில் பெரும் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய ஓப்பனர்கள் வேறு மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார்கள்.

stoinis
stoinis

ஆஸ்திரேலியா - மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்: சிறந்த ஸ்பின் அட்டாக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் எப்படி பேட்டிங் செய்யப்போகிறது என்பது ஆட்டத்தை நிர்ணயிக்கும். அதிலும் குறிப்பாக நல்ல ஃபார்மில் இருக்கும் ஸ்டாய்னிஸ், ஒட்டுமொத்தமாக போட்டியின் போக்கையே மாற்றக்கூடும்.

கணிப்பு: ஆஸ்திரேலிய அணி ஆறாவது வெற்றியைப் பதிவு செய்யும்.

aus vs afg
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com