பிரமாதமா விளையாடுறீங்க! சென்னை வரும்போது சந்திக்கலாம்! - இளம் கிரிக்கெட் வீரரை இன்வைட் செய்த ரஜினி!

எப்போதும் இளைஞர்களையும் இளம்வீரர்களையும் உற்சாகப்படுத்துவதிலும், தட்டிக்கொடுப்பதிலும் தனி சிந்தனை உடையவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்.
Rajinikanth
RajinikanthTwitter

இளைஞர்களை தட்டிக்கொடுப்பதில், ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டும் தான்!

சூப்பர் ஸ்டார் என்ற மாபெரும் பட்டத்தை வைத்திருந்தாலும், திறமையான இளைஞர்கள், இளம்வயது சாதனையாளர்கள் தொடங்கி, சிறுவர்கள், பெண்கள் என யார் தங்களுடைய துறையில் புதிதாய் கால்பதித்தாலும், திறமையோடு காணப்பட்டாலும், அவர்களை நேரிலோ அல்லது போன் காலிலோ அழைத்து வாழ்த்தி உற்சாகப்படுத்துவதில், ரஜினிக்கு நிகர் ரஜினி மாத்திரமே.

Rajini
RajiniTwitter

ரஜினியின் இந்த குணத்தைப் பார்த்து, அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும், “அடுத்தடுத்து இரண்டு படங்கள் பண்றீங்க, புதுசா ரிலீஸ் ஆகுற எல்லா படங்களையும் பாக்குறீங்க, சீரியல கூட பார்க்குறேனு சொல்றீங்க, ஐபிஎல் மேட்ச்சும் பார்க்குறீங்க, அதுல யாரு திறமையோடு இருந்தாலும் எல்லாருக்கும் போன் பண்ணி வாழ்த்தும் சொல்றீங்க, இது எல்லாத்தையும் மீறி, இளமைகாலம் போலவே தொடர்ச்சியா பிளைட் டிராவல் வேற பண்றீங்க. 72 வயசுல எப்படி தலைவா?” என வியந்து பாராட்டி வருகின்றனர்.

இளம் கிரிக்கெட் வீரரை அழைத்து வாழ்த்து சொன்ன ரஜினி!

இந்நிலையில் தற்போது சினிமா, அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்கிற்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளாராம் ரஜினிகாந்த். நடப்பு ஐபிஎல் தொடரில், தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் 5 சிக்சர்களை பறக்கவிட்டு, ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருந்தார், கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங்.

Rajini
RajiniPT

அவருடைய அபாரமான பேட்டிங்கானது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல், சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்தையும் வியக்கவைத்துள்ளது. அவரின் பேட்டிங் திறமையை பாராட்ட நினைத்த ரஜினி, அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல், சென்னை வரும்போது நேரில் சந்திக்கலாம் என்று இன்வைட்டும் செய்திருக்கிறாராம்.

சென்னை வரும் போது நேரில் சந்திக்கலாம்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, ரிங்கு சிங்கிற்கு தனிப்பட்ட முறையில் போன் செய்த ரஜினிகாந்த், நிறைய வாழ்த்துக்களையும், உற்சாகப்படுத்தக்கூடிய வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளாராம். அடுத்தமுறை நீங்கள் சென்னை வரும்போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேன் எனவும் உறுதியளித்துள்ளாராம். ரஜினி பேசியதில் நிறைய புரியவில்லை என்றாலும், அவருடைய அழைப்பை எதிர்பார்க்காத ரிங்கு சிங், அதீத மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rinku Singh
Rinku SinghPTI

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அன்றைய நாளில் ரஜினியும், ரிங்கு சிங்கும் மீட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பட ஷூட்டிங்கிற்காக ரஜினி மும்பையில் இருப்பதால், அவர்களுடைய சந்திப்பானது தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதிரடியில் மிரட்டுவது மட்டுமல்லாமல், கஷ்டப்படும் இளம் வீரர்களுக்கு விடுதி கட்டிவரும் ரிங்கு!

கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடிவரும் ரிங்கு சிங், தொடர்ச்சியாக தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டி வருகிறார். இக்கட்டான சூழ்நிலையில் களத்திற்கு வரும் அவர், கடைசி நேரத்தில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரன்களை எடுத்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்துவைக்கிறார். இதனால்தான் ஆன்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருந்தும், ரசிகர்கள் அனைவரும் “ரிங்கு சிங்” என ஆரவாரம் செய்வதை பார்க்கமுடிகிறது.

Rinku Singh
Rinku SinghPT

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தன்னைப்போல யாரும் கடினமான பாதையில் பயணிக்கக்கூடாது என்பதற்காக, கடைநிலையில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் வசதியுடன் கூடிய கிரிக்கெட் பயிற்சி விடுதியையும் ரிங்கு சிங் கட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com