\
அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாbcci

IND vs AFG டி20| 30 பந்தில் 80 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா.. வெற்றிப்பாதையில் இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அரைசதமடித்து அசத்தினார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா.
Published on
Summary

டெல்லியில் நடைபெறும் இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் முதல் போட்டியில், ஹோஸ்ட் அணியாக விளையாடும் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 156 ரன்கள் எடுத்தது. பும்ரா, அக்சர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் கட்டுப்பாட்டான பந்துவீச்சால் 43 ரன்னில் 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. பின்னர் அஸ்மதுல்லா ஓமர்சாய் 64, முகமது நபி 33 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய மண்ணிலேயே இந்திய அணி வெளிநாட்டு அணியாக விளையாடுகிறது. அதாவது, இந்தத் தொடர் டெல்லியில் நடைபெற்றாலும், அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் அணிதான் போட்டியை நடத்தும் 'ஹோஸ்ட்' அணியாக செயல்படுகிறது.

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இரவு 7.30 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, பும்ரா, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சால் 43 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

6வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் போட்டு சிறப்பாக விளையாடிய அஸ்மதுல்லா ஓமர்சாய் 64 ரன்களும், முகமது நபி 33 ரன்களும் அடிக்க 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை அடித்த ஆப்கானிஸ்தான்.

157 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 10 ரன்னில் அவுட்டானாலும், மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 22 பந்தில் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்டு அரைசதமடித்து அசத்தினார். 7 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என துவம்சம் செய்துவரும் அபிஷேக் சர்மா 30 பந்தில் 80 ரன்கள் அடித்து விளையாடிவருகிறார். 11 ஓவரில் 140 ரன்கள் அடித்திருக்கும் இந்தியா வெற்றிக்கு அருகாமையில் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com