”ஜடேஜா ஃபினிசரே கிடையாது ; ஜெய்ஸ்வால் அணியில் தேவையில்லை”! IND-ன் மிகப்பெரிய கவலை பற்றி முன்.வீரர்!

“இந்திய அணியில் ஜடேஜாவை ஒரு ஃபினிசராக எடுத்துக்கொள்ள கூடாது, அவரை அந்த இடத்திற்கு அணிதான் தள்ளியுள்ளது, அவர் ஒருமுறை கூட இந்திய அணிக்காக முடித்துதரவில்லை” - முன்னாள் இந்திய வீரர்
ஜடேஜா - ஜெய்ஸ்வால் - துபே
ஜடேஜா - ஜெய்ஸ்வால் - துபேweb

2024 டி20 உலகக்கோப்பையில் தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாடவிருக்கிறது இந்திய அணி. முதல் மோதலுக்கு முன்னதாக இந்திய அணி எப்படி செயல்படவேண்டும்? அணியில் உள்ள பிரச்னைகள் என்ன? என்பது பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஜியோ சினிமாவுடன் உரையாடியுள்ளார்.

ஜடேஜா - ஜெய்ஸ்வால் - துபே
“உலகக்கோப்பையை வெல்லாமல் கூட போங்க.. ஆனால் இந்தியாவிடம் தோற்காதிங்க”!- முகமது ரிஸ்வான் சொன்ன ரகசியம்

’பந்துவீச்சு- பேட்டிங்’ இந்தியா எப்படி இருக்க வேண்டும்?

* நியூயார்க்கில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுவதை பார்க்கிறோம். ஒருவேளை ஆடுகளம் பந்துவீச்சுக்கு சிறப்பாக செயல்பட்டால், அது பும்ராவாக இருந்தாலும் சரி, அர்ஷ்தீப்பாக இருந்தாலும் சரி, இந்தியாவின் எந்த பவுலராக இருந்தாலும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

* பவர்பிளேவில் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை எடுக்க வேண்டும், அப்போது தான் போட்டியை உங்களுக்கு சாதகமாக நீங்கள் அமைத்துகொள்ள முடியும். நீங்கள் தொடக்கத்திலேயே 2-3 விக்கெட்டுகளை கைப்பற்றினால், மிடில் ஆர்டரில் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து கட்டுப்படுத்த முடியும்.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

*அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம், நன்றாகத் தொடங்கவேண்டியது மிகவும் முக்கியம். ஏனென்றால் நீங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை தவறவிட்டால் அந்த அணிகள் போட்டியில் ஆதிக்கம் செலுத்த நேரிடும்.

Pant - Chahal
Pant - Chahal

*புதிய பந்தில் நன்றாக பந்து வீசுவதும், புதிய பந்துக்கு எதிராக நன்றாக பேட் செய்வதும் மிகவும் முக்கியமான ஒன்று. இரண்டில் ஒன்று வேலை செய்யவில்லை என்றால், உங்கள் மனஉறுதி உடைந்து விடும். நீங்கள் அயர்லாந்தை தோற்கடிக்க விரும்பினால், முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு மேல் இழக்கக்கூடாது. இரண்டாவதாக, உங்கள் பந்துவீச்சின் தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து, பின்னர் உங்கள் சுழலில் ஆட்டத்தை கட்டுப்படுத்தவும்.

ஜடேஜா - ஜெய்ஸ்வால் - துபே
”உங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை..” - செய்தியாளரிடம் ஆவேசமாக பேசிய பட்லர்! என்ன நடந்தது?

ஆடும் 11 வீரர்களில் யாருக்கெல்லாம் இடம்?

*தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடங்குவார்கள், அதாவது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடமில்லை. 3-வது இடத்தில் ரிஷப் பண்ட் ஆடுவார், இந்தியாவுக்கு ஒரு இடது கை வீரர் தேவைப்படுவதால் 3வது வீரராக அவர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

virat kohli - rohit sharma - jaiswal
virat kohli - rohit sharma - jaiswalweb

*யஷஸ்வி ஒரு இடது கை ஆட்டக்காரராக இன்னிங்ஸைத் திறக்க வேண்டும் என்பது நம்பிக்கை, ஆனால் அவரை XI -ல் வைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவருக்கும் ஷிவம் துபேவுக்கும் இடையில் ஒருவர் மட்டுமே விளையாட முடியும். அதனால் அவர்கள் துபேவுடன் செல்வார்கள் என நினைக்கிறேன்.

Hardik Pandya
Hardik Pandya

* சூர்யகுமார் யாதவ் 4வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா 6வது இடத்திலும் விளையாடுவார்கள். இடையில் விக்கெட் விழுவதை பொறுத்து ஷிவம் துபே செல்வார். ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அதன்பிறகு, 100% விளையாட வேண்டிய குல்தீப் யாதவ் உங்களிடம் இருப்பார். அவரை தொடர்ந்து இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா. இதுதான் நான் எதிர்ப்பார்க்கும் ஆடும் லெவன்.

ஜடேஜா - ஜெய்ஸ்வால் - துபே
77 ரன்னுக்கு ஆல்அவுட்டான இலங்கை.. டி20 கிரிக்கெட்டில் மிக மோசமான சாதனை! புது வரலாறு படைத்த நோர்ட்ஜே!

இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகள்!

*முதல் பிரச்னையாக இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய கவலை ஃபினிசர் ரோல் தான். ரவீந்திர ஜடேஜா உங்களின் ஃபினிஷராக ஒருபோதும் இருக்கமுடியாது. அந்த இடத்திற்கு அவரை அணிதான் தள்ளியுள்ளது. ஆனால் அவர் ஒருமுறை கூட ஃபினிசிங் ரோலில் நன்றாக செயல்பட்டதில்லை. அவர் ஒரு சிறந்த ஃபினிஷர் இல்லை என்பதை கூட நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம்.

jadeja
jadeja

*இரண்டாவது கவலையாக இருப்பது சிவம் துபேவின் ஃபார்ம், தற்போது நன்றாகவே இருக்கிறது. ஆனால் சரியாக செல்லவேண்டும் என்ற கவலை அதிகமாகவே இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம்தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய பாசிட்டாவாக இருக்கிறது. பேட்டிங் செய்யும் போது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். ரோகித் சர்மா, விராட் கோலியை தொடர்ந்து நிச்சயமாக ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் யாதவ் என டாப் 4 பிரகாசமாகவே இருக்கிறது. ஆனால் சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரின் ஃபார்ம் தான் பேட்டிங்கில் இருக்கும் இரண்டு கவலைக்குரிய பகுதிகளாக இருக்கிறது.

dube
dube

*மற்றொரு கவலை அணியின் பீல்டிங், நிச்சயம் அது அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். அவர்கள் களத்தில் சிறந்த உடற்தகுதியுடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஜடேஜா - ஜெய்ஸ்வால் - துபே
”உன் ஆப்ரேசனுக்கு நான் பொறுப்பு” - அத்துமீறிய ரசிகருக்கு இப்படியொரு சோகமா? தோனி கொடுத்த நம்பிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com