இது Fake.. தொப்பையுடன் கூடிய ரோகித் படம் வைரல்.. PAK வீரருக்கான Troll எதிரொலி? பதிலடி கொடுத்த Fans!

அதிக தொப்பையுடன் கூடிய ரோகித் சர்மாவின் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படத்தின் உண்மை புகைப்படம் வைரலாகி வருகிறது.
azam khan - rohit sharma
azam khan - rohit sharmaweb

பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும், அவர்கள் கடைசியாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என தோல்வியை சந்தித்தனர். அயர்லாந்துக்கு எதிராக தொடரை வென்றாலும், அதனை தொடர்ச்சியாக எடுத்துசெல்ல முடியாமல் தடுமாறும் பாகிஸ்தான் அணியில் வீரர்களின் ஃபிட்னஸ் பிரச்னை பெரிய கவலையாக இருந்துவருகிறது.

azam khan
azam khan

அது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் வெளிப்பட்டது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆசாம் கான், கடந்த 4 வருட இடைவெளியில் ஆளே அடையாளம் தெரியாத அளவு பருமனான தோற்றத்துடன் காணப்படுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஒரு எளிதான கேட்சை விட்டபிறகு, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார் ஆசம் கான்.

azam khan
azam khan

2022 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கூட, பாகிஸ்தான் அணி தங்களுடைய மோசமான ஃபீல்டிங்கின் காரணமாக தான் தோல்வியை தழுவியிருந்தது. அதன்காரணமாக் தான் பாகிஸ்தான் அணி பெரிய அப்சட்டை டி20 உலகக்கோப்பையில் சந்திக்கும் என இந்தியாவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவும் கருத்து தெரிவித்திருந்தார்.

pakistan team
pakistan teamcricinfo

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூட, “உடற்தகுதி என்பது மிகவும் முக்கியமான விசயம். நீங்கள் ஃபிட்டாக இருந்தால் தான் உங்களால் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக இருக்க முடியும், இல்லையென்றால் உங்களால் ஆடுகளத்தில் சிறந்தஒன்றை எப்போதும் கொடுக்க முடியாது” என்று விமர்சித்திருந்தார்.

azam khan - rohit sharma
”தட்டிக்கொடுக்க சொன்ன தோனி” To ”இஷாந்த்-கோலி இடையான ஸ்பெஷல் நட்பு” - 2024 IPL-ன் 5 ’வாவ்’ மொமண்ட்ஸ்!

ட்ரோல் செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர் ஆசம் கான்!

ஆசம் கானின் உடற்தகுதி மற்றும் அவர் விட்ட எளிதான கேட்ச் எல்லாவற்றையும் சேர்த்து ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஒரு ரசிகர் எழுதும் போது, “விக்கெட் கீப்பிங்கில் பாகிஸ்தானின் எதிர்காலம் ஆசம் கான் என்றால், நான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்ப்பதையோ பின்தொடர்வதையோ நிறுத்திவிடுவேன். இது ரிஸ்வானுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்” என்று கருத்து தெரிவித்தார்.

மற்றொரு பயனர், “இந்த உடற்தகுதியுடன் நீங்கள் விளையாட முடியாது, இது லீக் கிரிக்கெட் அல்ல, இது சர்வதேச கிரிக்கெட். இங்கு நீங்கள் 150+ வேகத்தை எதிர்கொள்ள வேண்டும்” என்று எழுதினார்.

மேலும் ஒருவர், “ஸ்பின்னருக்கு எதிராக சரியாக விளையாட முடியவில்லை, உண்மையான வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுகிறார். ஆசம் கான் தன்னை சங்கடப்படுத்துகிறார்” என்று கருத்து தெரிவித்தார்.

azam khan - rohit sharma
”உன் ஆப்ரேசனுக்கு நான் பொறுப்பு” - அத்துமீறிய ரசிகருக்கு இப்படியொரு சோகமா? தோனி கொடுத்த நம்பிக்கை!

வைரலான ரோகித் சர்மாவின் ஃபேக் ஃபோட்டோ!

ஆசம் கானின் ஃபிட்னஸ் ட்ரோல் டி20 ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், இந்திய ரசிகர்களும் ஆசம் கானை தாக்கி கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதிய போட்டிக்கு பிறகு, தொப்பையுடன் இருப்பது போலான ரோகித் சர்மாவின் புகைப்படும் வைரலானது. அந்த புகைப்படத்தை சில பாகிஸ்தான் ரசிகர்கள் பகிர்ந்து “இந்திய கேப்டனின் சிறந்த உடற்தகுதி” என ட்ரோல் செய்தனர்.

rohit sharma
rohit sharma

இதனை பார்த்த இந்திய ரசிகர்கள், இது உண்மையான புகைப்படம் அல்ல என்றும், இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக பகிர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

azam khan - rohit sharma
”தலைவன் எவ்வழியோ..” - தோனி ஸ்டைலில் எளிமையாக ஓய்வு அறிவிப்பு; கேதர் ஜாதவின் திறமை வீணாக போனதா?!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com