dube - vijay - tripathi - sam
dube - vijay - tripathi - samweb

வேண்டுமென்றே கேட்ச் விடும் எதிரணி? அந்த 2 வீரர்கள் தேவைதானா? CSK அணியில் செய்யவேண்டிய 4 மாற்றங்கள்!

2025 ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப்க்கு செல்லவேண்டுமானால் சிஎஸ்கே கீழ்வரும் 4 மாற்றங்களை செய்யவேண்டும்.
Published on

பிளே ஆஃப்க்கு செல்லாத ஐபிஎல் சீசன்களை இதற்கு முன்னரும் சிஎஸ்கே அணி கொண்டுள்ளது, ஆனால் அந்த சீசன்களில் எல்லாம் வெற்றிக்காக போராடும் ஒரு இண்டண்ட் உடன் விளையாடிய பிறகுதான் சிஎஸ்கே அணி தகுதிபெற முடியாமல் வெளியேறியது.

அதற்கெல்லாம் அப்படியே தலைகீழாக 2025 ஐபிஎல் தொடரானது சிஎஸ்கே அணிக்கு ஒரு மறக்கவேண்டிய தொடராகவே இதுவரை அமைந்துள்ளது. ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களில் ஒருவரிடம் கூட வெற்றிபெறுவதற்கான இண்டட்டும், டி20 போட்டிக்கான ஆக்ரோஷமான அணுகுமுறையும் துளிகூட இல்லவேயில்லை. உண்மையா நீங்கலாம் பேட்ஸ்மேன்கள் தானா? இல்லை உங்கள நீங்களே ஏமாத்திறிங்களா? என நினைக்கும் ஒரு மோசமான இல்லை இல்லை படுமோசமான ஒரு பேட்டிங்கையே சிஎஸ்கே வீரர்கள் வெளிப்படுத்திவருகின்றனர்.

MS Dhoni to captain CSK for rest of IPL 2025
தோனிpt

முதல் 6 போட்டியில் வரிசையாக 5 போட்டிகளில் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோவுக்கு எதிரான 7வது போட்டியில் மிகச்சிறப்பான பிளேயிங் லெவனுடன் களம்கண்டு வெற்றியையும் ருசித்துள்ளது. அணிக்குள் புதியதாக இணைந்துள்ள 20 வயதேயான ஷைக் ரசீத் ‘எங்கயா இண்டண்ட்’ என தேடிக்கொண்டிருந்த’ சிஎஸ்கே ரசிகர்களின் ஆதங்கத்திற்கு விடையாக வந்துசேர்ந்துள்ளார்.

தல தோனி கேப்டனாக மாறியாச்சு, சில நல்ல மாற்றங்களையும் எடுத்துவந்தாச்சு, இன்னும் எதற்காக அந்த 2 பேரு? அவங்களையும் தூக்கி வெளில போடுங்க என்பது போல் சில ஆதங்கத்தை இன்னமும் சிஎஸ்கே ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மீதமிருக்கும் 7 போட்டிகளில் 6-ல் வெற்றிபெற்று பிளேஆஃப்க்கு செல்லவேண்டுமானால் சிஎஸ்கே சில மாற்றங்களை செய்யவேண்டியது மிகவும் அவசியாமானது.

செய்யவேண்டிய 4 மாற்றங்கள்..

திரிப்பாத்தி - விஜய் சங்கர்:

பேட்டிங்கில் சொதப்பிவரும் திரிப்பாத்தி மற்றும் விஜய் சங்கர் இருவரையும் வெளியேற்றிவிட்டு, இளம் வீரர்களான வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த் மற்றும் டாக்கில் இருந்துவரும் ஆயுஸ் மாத்ரேவை ருதுராஜ்க்கு மாற்றுவீரராக எடுத்துவர வேண்டும்.

திரிப்பாத்தி, விஜய் ஷங்கர் இருவரும் பேட்டிங் செய்ய வந்தாலே ‘அவங்களே கேட்ச் கொடுத்தாலும் நீங்க பிடிக்ககூடாது’ என்பதுபோல் கைக்குவரும் கேட்ச்சையெல்லாம் தவறவிட்டு வருகின்றன எதிரணிகள். இந்த சூழலில் டெல்லி டி20 லீக்கில் சிக்சர்களாக பறக்கவிட்ட இளம்வீரர் வன்ஷ் பேடி, பவர்பிளேவில் சிக்சர்களை தேடிக்கொண்டிருக்கும் சிஎஸ்கே அணிக்கு பெரிய பாசிட்டிவாக இருப்பார்.

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

ஷிவம் துபே - சாம் கரன்:

அதேபோல ஷிவம் துபேவை அணிக்குள் எடுத்துவந்துவிட்டு சாம் கரனை இம்பேக்ட் வீரராக களமிறக்கவேண்டும். இதைசெய்தால் டெத் எண்ட்டில் சில பவுண்டரி, சிக்சர்களை சிஎஸ்கே அணியால் எடுத்துவர முடியும்.

சாம் கரன்
சாம் கரன்

ஓவர்டன்:

அதுமட்டுமில்லாமல் ஜேமி ஓவர்டனை மிடில் ஆர்டரில் களமிறக்க வேண்டும், அப்படி களமிறக்கினால் மிடில் ஆர்டரில் நல்ல ஹிட்டிங் ஷாட்களை அடிக்கும் திறமையான வீரரான அவரிடமிருந்து நல்ல இன்னிங்ஸை சிஎஸ்கே அணியால் எடுத்துவர முடியும்.

ஓவர்டன்
ஓவர்டன்

ஃபீல்டிங்:

அதனுடன் ஃபீல்டிங்கில் மோசமாக செயல்பட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிரவுண்ட் ஃபீல்டிங்கிலும், கேட்ச் பிடிப்பதிலும் கம்பேக் கொடுத்துவிட்டால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தால்கூட மீண்டுவந்து டாப் 4-க்குள் இடம்பிடிக்கும் வாய்ப்பை உருவாக்க முடியும்.

சிஎஸ்கே
சிஎஸ்கேBCCI

வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் வெற்றிகேப்டனான தோனி, அணிக்குள் தேவையான மாற்றங்களை எடுத்துவந்து மேஜிக் செய்வாரா என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com