கோலாகலமாக தொடங்குகிறது மகளிர் ஐபிஎல் 2025: ஸ்டார் வீரர்கள் யார், யார்? எங்கு நடக்கிறது? முழுவிவரம்!
ஐபிஎல்லை போன்றே கிரிக்கெட் ரசிகர்களின் பெருமித்த வரவேற்பை பெண்கள் ஐபிஎல் என கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக்கும் பெற்றுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக WPL தொடரானது 2023 முதல் தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது.
முதலிரண்டு சீசன்களில் முதல் சீசனை ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றி அசத்தின.
இந்நிலையில், 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடர் நாளை பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
2025 மகளிர் பிரீமியர் லீக் தொடர்..
2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது பிப்ரவரி 14 முதல் தொடங்கி மார்ச் 15-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. 5 அணிகளான டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் 20 லீக் போட்டிகளில் விளையாடவிருக்கின்றன. அதாவது ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோதவிருக்கின்றன.
லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்று இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இறுதிப்போட்டி மார்ச் 15-ம் தேதியன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
5 அணிகள் விவரம்?
குஜராத் ஜியண்ட்ஸ்: ஆஷ்லீக் கார்ட்னர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், பிரகாஷிகா நாயக், பெத் மூனி, காஷ்வீ கௌதம், பிரியா மிஸ்ரா, பார்தி ஃபுல்மாலி, லாரா வால்வார்ட், சயாலி சட்சரே, டேனியல் கிப்சன், மன்னத் காஷ்யப், ஷப்னம் ஷகில், தயாளன் சிங்த்ரா ஹேமலதா, ஷப்னம் ஷகில், தயாளன் சிங்த்ரா ஹேமலதா, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தனுஜா கன்வர்
டெல்லி கேபிடல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஆலிஸ் கேப்ஸி, சாரா பிரைஸ், அனாபெல் சதர்லேண்ட், மின்னு மணி, ஷஃபாலி வர்மா, அருந்ததி ரெட்டி, என் சரணி, ஷிகா பாண்டே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், நந்தினி காஷ்யப், சினேகா தீப்தி, ஜெஸ் ஜோனாசென், நிகி பிரசாத், தினியா பிரசாத், தினியா பந்த்யா, தினியா பிரசாத் சாது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஆஷா சோபனா ஜாய், ஜோஷிதா விஜே, ரிச்சா கோஷ், டேனி வியாட், கனிகா அஹுஜா, சப்பினேனி மேகனா, ஏக்தா பிஷ்ட், கேட் கிராஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், எலிஸ் பெர்ரி, பிரேமா ராவத், ஜார்கியாவி தேவி, ஜார்கியா தேவி பவார், ரேணுகா சிங், சோஃபி மோலினக்ஸ்
உபி வாரியர்ஸ்: தீப்தி சர்மா (கேப்டன்), அலனா கிங், கௌஹர் சுல்தானா, சைமா தாகூர், அலிஸ்ஸா ஹீலி, கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா செஹ்ராவத், அஞ்சலி சர்வானி, கிரண் நவ்கிரே, சோஃபி எக்லெஸ்டோன், ஆருஷி கோயல், கிராந்தி கவுட், தஹ்லியா மெக்ராத், சாமரி அதாபத்து, ராஜேஸ்வரி கயக்வாட், விருந்தா தினேஷ், பூனம் கெம்னார், உமா செத்ரி
மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அக்ஷிதா மகேஸ்வரி, பூஜா வஸ்த்ரகர், அமந்தீப் கவுர், ஹெய்லி மேத்யூஸ், சைகா இஷாக், அமன்ஜோத் கவுர், ஜின்டிமணி கலிதா, சஜீவன் சஜானா, அமெலியா கெர், கீர்த்தனா பாலகிருஷ்ணன், சமஸ்கிருதி குப்தா, ஷாப் கமல் டி க்லர், நாட் ஜிமெயில், ஷாப் கமல் டி க்லர், நடாலி ஸ்கிவர்-பிரண்ட், யாஸ்திகா பாட்டியா
கவனிக்க வேண்டிய வீரர்கள்?
ஸ்மிருதி மந்தனா (ஆர்சிபி): 2024ஆம் ஆண்டு ஸ்மிரிதி மந்தனாவுக்கு ஒரு தலைசிறந்த ஆண்டாக இருந்தது. 13 ஒருநாள் போட்டியில் 747 ரன்கள் குவித்த அவர், ஒரே ஆண்டில் 4 சதங்களை விளாசி சாதனை படைத்தார். கடந்த 2024 மகளிர் ஐபிஎல் தொடரிலும் 300 ரன்களை குவித்திருந்த நிலையில், நடப்பு சாம்பியனாக 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்கவிருக்கிறார்.
தீப்தி ஷர்மா (உபி வாரியார்ஸ்): காயம் காரணமாக கேப்டன் ஹீலி வெளியேறிய பிறகு, WPL 2025 சீசனுக்கான UP வாரியர்ஸின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் நட்சத்திர ஆல்ரவுண்டரான தீப்தி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
ஷஃபாலி வர்மா (டெல்லி கேபிடல்ஸ்): ஃபார்ம் இல்லாததால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, 2025 மகளிர் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மெக் லானிங் (டெல்லி கேபிடல்ஸ்): 2023 மற்றும் 2024 என இரண்டு வருடங்களிலும் இறுதிப்போட்டிவரை டெல்லியை வழிநடத்திய மெக் லானிங், 2025-ல் டிரோபியை வென்று கொடுப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பாண்டு சர்வதேச லீக் டி20 தொடரில் டெல்லி பிரான்சைஸ் கோப்பையை வென்றிருக்கும் நிலையில், WPL 2025 டிராபியும் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
டேனி வியாட்-ஹாட்ஜ் (ஆர்சிபி): சோஃபி டிவைன் இல்லாததால், அதிரடி வீரர் டேனி வியாட்-ஹாட்ஜ் ஆர்சிபிக்கு எப்படி விளையாட போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹேலி மேத்யூஸ் (மும்பை இந்தியன்ஸ்): 19 WPL போட்டிகளில் விளையாடி 451 ரன்கள் மற்றும் 23 விக்கெட்டுகள் என பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தியிருக்கும் மேத்யூஸ், லீக்கில் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
டியான்ட்ரா டாட்டின் (குஜராத் ஜெயண்ட்ஸ்): பெண்கள் T20களில் கிட்டத்தட்ட 5,000 ரன்கள் மற்றும் 125 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் டாட்டின், WT20I களில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற டேக் லைனுடன் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் வீரராக இருக்கிறார்.
அன்னபெல் சதர்லேண்ட் (டெல்லி கேபிடல்ஸ்): தற்போது அனைத்து வடிவங்களிலும் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கும் அன்னபெல் மீது ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் உள்ளது.
பெத் மூனி (குஜராத் ஜெயண்ட்ஸ்): குஜராத் அணியின் ஸ்டார் வீரர்.
எல்லிஸ் பெர்ரி (ஆர்சிபி): மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஆர்சிபி வீரர்.
ஃபோப் லிட்ச்ஃபீல்ட் (குஜராத் ஜெயண்ட்ஸ்): லிட்ச்ஃபீல்ட் ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான டாப்-ஆர்டர் பேட்டர். WPL 2025-ல் முத்திரை பதிக்கவிருக்கிறார்.
எப்போது, எங்கு நடைபெறுகிறது?
WPL 2025 இந்தியாவில் பெங்களூரு, லக்னோ, மும்பை மற்றும் வதோதரா என நான்கு வெவ்வேறு வென்யூக்களில், பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை நடைபெறுகிறது.
எந்த நேரத்தில் தொடங்குகிறது?
WPL 2025 இன் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கி நடைபெறவிருக்கிறது.
நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
WPL 2025 நேரடி ஒளிபரப்பை Sports18 நெட்வொர்க்கில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோ சினிமா ஆப் மற்றும் வெப்சைட்டில் பார்க்கலாம்.
முதல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே தொடங்குகிறது.