ipl 2025 update
ipl 2025 updateweb

ஐபிஎல் 2025 | Playoffs நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி!

2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
Published on

2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் 3 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், மீதமிருக்கும் கடைசி ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

ipl 2025 suspended indefinitely amid escalation in india pakistan war
பிசிசிஐ, ஐபிஎல்எக்ஸ் தளம்

இந்த சூழலில் பிளேஆஃப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஃபைனல்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒருவார காலம் இடை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பிளேஆஃப் நடைபெறும் இடங்கள் வெதர் கண்டிசனை பொறுத்து அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மே 29 மற்றும் மே 30-ம் தேதிகளில் நடைபெறும் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நியூ சண்டிகரில் உள்ள புதிய பிசிஏ மைதானத்திலும், ஜுன் 1 மற்றும் ஜுன் 3-ம் தேதிகளில் நடைபெறும் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே பெங்களூரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த 65வது லீக் போட்டியானது மழை காரணங்களுக்காக லக்னோவிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com