மேத்யூ ஹைடன் முதல் பிரயன் லாரா வரை..! இந்தியாவை தேர்ந்தெடுத்த 10 உலக வீரர்கள்! டாப் 4 அணிகள் எவை?

“இந்திய அணி பேப்பரில் வலுவான அணியை கொண்டுள்ளது, ஒருவேளை அவர்கள் பேப்பரில் இருக்கும் தரத்தை களத்தில் வெளிப்படுத்தினால் அவர்களால் யாரை வேண்டுமானாலும் வெல்ல முடியும்” - இயன் மோர்கன்
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web

2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2ம் தேதி கோலாகலமாக தொடங்கப்படவிருக்கும் நிலையில், கோப்பையை வெல்வதற்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஐந்து-ஐந்து அணிகளாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவிருக்கின்றன.

குரூப் A-ல்,

இந்திய அணியுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் B-ல்,

நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.

INDIA TEAM
INDIA TEAM web

குரூப் C-ல்,

சொந்த மண்ணில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் ஜெனிவா முதலிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் D-ல்,

தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாள் முதலிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி
’Toss போடுவதில் ஏமாற்றிய MI?’ முதல் ‘கைக்கொடுக்காமல் சென்ற தோனி’ வரை! 2024 IPL-ன் டாப் 5 சர்ச்சைகள்!

இந்திய அணிக்கு இருக்கும் பிரகாசமான வாய்ப்பு!

டி20 வடிவம் என்பதால் சிறிய அணி, பெரிய அணி என்ற வித்தியாசம் இல்லாமல் பல அப்செட்டுகள் உலகக்கோப்பையில் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. கடந்த டி20 உலகக்கோப்பையில் கூட சிறிய அணிகள், வலுவான அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், நடப்பு உலகக்கோப்பையில் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் இந்திய அணி ஐபிஎல் தொடரிலிருந்து நேரடியாக சென்றிருப்பது டி20 வடிவத்திற்கு சாதகமான சூழல் என்றாலும், அங்கிருக்கும் ஆடுகளத்தின் தன்மையை சமாளிக்கும் வகையிலான ஒரு அணியுடனே பயணம் செய்துள்ளது.

Eoin Morgan
Eoin Morgan

இதனால் இந்திய அணி குறித்து பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், “என்னைப் பொறுத்தவரை, தொடர் முழுவதும் காயங்கள் முதலிய பிரச்னைகள் இருந்தால் கூட வலுவான அணி என்றால் அது சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாதான். இந்த நேரத்தில் இந்தியா கொண்டிருக்கும் வலிமை மற்றும் ஆழம் முற்றிலும் நம்பமுடியாதது. நாம் அவர்களின் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறாத வீரர்களைப் பற்றி பேசுகிறோம், ஏனென்றால் அவர்கள் அந்தளவு தரமான வீரர்களை வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி
”உன் ஆப்ரேசனுக்கு நான் பொறுப்பு” - அத்துமீறிய ரசிகருக்கு இப்படியொரு சோகமா? தோனி கொடுத்த நம்பிக்கை!

டாப் 4 அணிகளில், இந்தியாவை தேர்ந்தெடுத்த 10 உலக வீரர்கள்!

Ambati Rayudu
Ambati Rayudu

அம்பதி ராயுடு:

இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா

லாரா - கோலி
லாரா - கோலிweb

பிரையன் லாரா:

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்

பால் காலிங்வுட்
பால் காலிங்வுட்

பால் காலிங்வுட்:

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா

Sunil Gavaskar
Sunil GavaskarFile Image

சுனில் கவாஸ்கர்:

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்

மோரிஸ்
மோரிஸ்

கிறிஸ் மோரிஸ்:

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா

ஹைடன்
ஹைடன்

மேத்யூ ஹைடன்:

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா

ஆரோன் பின்ச்
ஆரோன் பின்ச்

ஆரோன் பின்ச்:

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள்

Sanju Samson - Kaif
Sanju Samson - KaifTwitter

முகமது கைஃப்:

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து

டாம் மூடி
டாம் மூடி

டாம் மூடி:

ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து

Sreesanth
SreesanthPTI

எஸ் ஸ்ரீசாந்த்:

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து

இந்திய கிரிக்கெட் அணி
”MI-ம் ரோகித்தும் பிரிவார்கள்.. உடன் அவரும் வெளியேறுவார்”! 2025 ஐபிஎல் Retained பற்றி ஆகாஷ் சோப்ரா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com