இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்னவாகும்?

இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்னவாகும்?
இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்னவாகும்?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், ஒருவேளை நாளை மழைக் குறுக்கிட்டால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்துக் காணலாம்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று, சூப்பர் 12 சுற்றுகள் ஆகியவை மழையுடன் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் அரையிறுதிக்கு தேர்வான நியூசிலாந்து அணியை, பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இதன்மூலம் வின்னரோ, ரன்னரோ தனது வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவுசெய்துள்ளது.

அதேநேரத்தில், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு அடிலெய்டு ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது மழை பெய்தால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்று பார்க்கலாம். ஏனெனில் இந்தத் தொடரில் மழையால் பல ஆட்டங்கள் கைவிடப்பட்டன. சில ஆட்டங்கள் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அப்படி அரையிறுதியின்போது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?.

நாளை நடைபெறும் போட்டியின்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சூழ்நிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மழையால் முதல் இன்னிங்ஸில் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியின் போது பெரிதாக மழை வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

1. ஐசிசி விதியின்படி, குரூப் சுற்றில் போட்டியின் முடிவுக்காக இரு அணிகளும் குறைந்தது தலா 5 ஓவர்கள் பேட் செய்வது அவசியம். ஆனால் நாக் அவுட் சுற்றில் போட்டியின் முடிவை எட்ட இரு அணிகளும் குறைந்தது தலா 10 ஓவர்கள் விளையாட வேண்டும்.

2. ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இரண்டிற்கும் ரிசர்வ் நாளை ஐசிசி வைத்துள்ளது. நாளை அரையிறுதி மழையால் பாதிக்கப்பட்டால், இரண்டாம் நாள் (நவம்பர் 11) ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கும்.

3. அவ்வாறு ரிசர்வ் நாளில் போட்டிகள் துவங்கினார் அதாவது நவம்பர் 11 ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து போட்டியின் ஆட்ட நேரம் இந்திய நேரப்படி காலை 09:30 மணிக்கு துவங்கும்.

4. மழை காரணமாக இரண்டாவது நாளிலும் ஆட்டத்தை முடிக்க முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு வரும். அத்தகைய சூழ்நிலையில், இந்திய அணி 8 புள்ளிகளுடன் குரூப்-2ல் முதலிடத்தில் உள்ளதால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com