“வில் யூ மேரி மீ”.. மைதானத்திலேயே ப்ரபோஸ் செய்த ரசிகர்! பெண் தோழி கொடுத்த ரியாக்‌ஷன்!

“வில் யூ மேரி மீ”.. மைதானத்திலேயே ப்ரபோஸ் செய்த ரசிகர்! பெண் தோழி கொடுத்த ரியாக்‌ஷன்!
“வில் யூ மேரி மீ”.. மைதானத்திலேயே ப்ரபோஸ் செய்த ரசிகர்! பெண் தோழி கொடுத்த ரியாக்‌ஷன்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் தனது பெண் தோழியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பிரிவில் உள்ள அணிகளும், தலா ஒருமுறை தங்களது பிரிவில் உள்ள அணியுடன் மோதியுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி அடைந்த நிலையில், இன்று நெதர்லாந்து அணியுடன் மோதியது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 179 ரன்கள் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 9 ரன்களும், ரோகித் சர்மா 53 ரன்களும் எடுத்திருந்தனர். விராட் கோலி 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே நெதர்லாந்து அணி எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தப் போட்டியின்போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த வகையில், இரண்டாவது இன்னிங்சின்போது நெதர்லாந்து அணி பேட்டிங் செய்துக் கொண்டிருந்தது. அப்போது 7-வது ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர், தனது பெண் தோழிக்கு, மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொள்ள ஒப்புதல் கேட்டார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் பின்னர் மறுக்காமல் அந்த ரசிகரின் காதலை ஏற்றுக்கொண்டார். இநது சம்பந்தமான வீடியோவை ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by ICC (@icc)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com