T20 உலகக் கோப்பை: இந்திய அணி நாளை ஜெயித்தால், அரையிறுதியில் யாருடன் மோதும்?

T20 உலகக் கோப்பை: இந்திய அணி நாளை ஜெயித்தால், அரையிறுதியில் யாருடன் மோதும்?
T20 உலகக் கோப்பை: இந்திய அணி நாளை ஜெயித்தால், அரையிறுதியில் யாருடன் மோதும்?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறியுள்ள நிலையில், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.

நாளை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் கடைசி போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தால் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியுடன் மோதும். அதேநேரத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரானப் போட்டியில் தோல்வியடைந்தால் நிலைமை அப்படியே மாறிவிடும். ஏனெனில், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் நல்ல நெட் ரன் ரேட் கொண்டுள்ளன.

தென்னாப்பிரிக்கா வெற்றி, பாகிஸ்தான் தோல்வி:

தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றி பெற்று, பாகிஸ்தான் வங்கதேசத்திடமும், இந்தியா ஜிம்பாப்வேவிடமும் தோல்வியடைந்தால், இந்தியா புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு செல்லும். ஏனெனில் வங்கதேசம் மற்றும் இந்தியா ஆறு புள்ளிகளுடன் நிறைவுசெய்யும். ஆனால் இந்தியா சிறந்த ரன் ரேட்டைக் கொண்டிருப்பதால் அரையிறுதில் நியூசிலாந்து அணியுடன் இந்தியா மோதும்.

பாகிஸ்தான் வெற்றி, தென் ஆப்பிரிக்கா தோல்வி:

வங்கதேசத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றியும், தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திடமும் தோற்றால், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தையோ அல்லது இரண்டாவது இடத்தையோ பெறலாம். இப்போதைக்கு, பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் +1.117 ஆகவும், இந்தியா +0.730 ஆகவும் உள்ளது. இதில் இந்தியா வெற்றிபெற்றால் முதலிடத்தைப் பிடித்து இங்கிலாந்துடனும், தோல்வியடைந்தால் நியூசிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்தும்.

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் இரண்டுமே வெற்றி:

இந்தியா தோல்வியடைந்து தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றால் இந்தியா போட்டியிலிருந்து வெளியேறும். அப்படியானால், தென்னாப்பிரிக்கா ஏழு புள்ளிகளுடன் நிறைவு செய்யும். பாகிஸ்தான் ஆறு புள்ளிகளுடன் நிறைவு செய்யும். இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் 6 புள்ளிகள் இருக்கும். இருப்பினும், இந்தியாவைவிட சிறந்த நிகர ரன் ரேட்டைக் கொண்டிருப்பதால், பாகிஸ்தான் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை இந்தியா வெற்றிபெற்றால், முதலிடத்தைப் பிடிக்கும். அப்போது இங்கிலாந்து அணியுடன் மோதும்.

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டால்:

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானின் இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டால், 6 புள்ளிகளுடன் உள்ள இந்தியா வெற்றிப்பெற்றால் இங்கிலாந்துடனும், தோல்வியடைந்தால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அரையிறுதியில் நியூசிலாந்துடனும் மோதும். பாகிஸ்தானும் வங்கதேசமும் நாக் அவுட் ஆகும்.

தென்னாப்பிரிக்கா வெற்றி, பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டால்:

நெதர்லாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று, பாகிஸ்தானின் ஆட்டம் கைவிடப்பட்டால், இந்தியா புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். தென்னாப்பிரிக்கா ஏழு புள்ளிகளுடன் நிறைவு செய்யும். இந்தியா ஆறு புள்ளிகளுடன் இருக்கும். அப்போதும் நியூசிலாந்து அணியுடன் இந்தியா மோதும். ஒருவேளை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளும் வெற்றிபெற்றால் இரண்டுமே அரையிறுதிக்கு முன்னேறும்.

பாகிஸ்தான் வெற்றி, தென்னாப்பிரிக்கா போட்டி கைவிடப்பட்டால்:

தென்னாப்பிரிக்காவின் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டு, பாகிஸ்தான் வெற்றி பெற்றால், இந்தியா தோல்வியடைந்தால் போட்டியிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் நிறைவு செய்யும். ஏனெனில் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டால் தென்னாப்பிரிக்கா நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னேறும். இருப்பினும், மூன்று அணிகளில் மிக மோசமான நிகர ரன் ரேட்டைக் கொண்டிருப்பது இந்தியா தான். எப்படி இருந்தாலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றிப்பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பெற முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com