டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாடலை அறிமுகம் செய்தது ஐசிசி

டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாடலை அறிமுகம் செய்தது ஐசிசி
டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாடலை அறிமுகம் செய்தது ஐசிசி

எதிர்வரும் அக்டோபர் 17-ஆம் தேதி முதல் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர் இது. இந்நிலையில் இந்த தொடருக்கான தீம் பாடலை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. 

மொத்தம் 1.30 நிமிடங்கள் ஓடும் இந்த பாலை அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் மாதிரியான வீரர்கள் ஹைலைட் செய்யப்பட்டுள்ளனர். 

மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா இந்த தொடரை நடத்துகிறது. இந்த வீடியோ ஐசிசி, பிசிசிஐ மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சோஷியல் மீடியா ஹேண்டிலில் வெளியாகி உள்ளது. 

சுமார் 40 பேர் இணைந்து இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். இதற்கான பாடலை பாலிவுட் சினிமா இசையமைப்பாளர் அமித் திரிவேதி கம்போஸ் செய்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com