டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - வாழ்வா? சாவா? போட்டியில் வங்கதேசம்
இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றிரவு நடைபெறும் தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் ஓமன் அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஓமன் அணி முதல் ஆட்டத்தில் பப்புவா நியு கினி அணியை வீழ்த்தியிருந்தது. இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் ஓமன் அணி வீரர்கள் களமிறங்குகின்றனர். ஜீசன் மக்சுத், அக்யுப் இல்லியாஸ், அயான் கான், முஹமது நதீம், சுஃப்யான் முஹமது, கவார் அலி ஆகிய ஆல்ரவுண்டர்கள் ஒமன் அணியில் உள்ளனர். ஜதிந்திர் சிங், கஷ்யப் பிரஜாபதி போன்ற பேட்ஸ்மேன்களும், பிலால் கான், கலிமுல்லா ஆகிய பந்துவீச்சாளர்களும் ஓமன் அணிக்காக உற்சாகம் பொங்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.