பெரிய அணிகளுக்கு தண்ணி காட்டும் கத்துக்குட்டி அணிகள்! வெஸ்ட் இண்டீஸை சாய்த்த ஸ்காட்லாந்து!

பெரிய அணிகளுக்கு தண்ணி காட்டும் கத்துக்குட்டி அணிகள்! வெஸ்ட் இண்டீஸை சாய்த்த ஸ்காட்லாந்து!

பெரிய அணிகளுக்கு தண்ணி காட்டும் கத்துக்குட்டி அணிகள்! வெஸ்ட் இண்டீஸை சாய்த்த ஸ்காட்லாந்து!

டி20 உலகக் கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் மோதிய வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெண்ட் இண்டிஸ் அணியை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது ஸ்காட்லாந்து அணி.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே உற்சாகமாக தொடங்கியுள்ளது டி20 உலகக் கோப்பை தொடர். உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும் போட்டிகளான குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முதலில் விளையாடப்பட்டு வருகிறது. இதில் நேற்று A பிரிவில் உள்ள அணிகளுக்கு நடைபெற்ற போட்டிகளில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றிபெற்ற நிலையில், இன்று குரூப் ஸ்டேஜ் B பிரிவில் உள்ள அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்காட்லாந்து அணி நல்ல தொடக்கம்:

அந்த வகையில் இன்று வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஸ்காட்லாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்து ஸ்காட்லாந்து பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் ஓப்பனிங் பேட்டர்கள் மன்சே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர் பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களிலேயே ஸ்காட்லாந்து அணி 50 ரன்களை கடந்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.

ஸ்காட்லாந்து 160 ரன்கள் குவிப்பு

அணியின் ஸ்கோர் 55 ரன்கள் இருந்த நிலையில் முதல் விக்கெட்டை ஸ்டம்புகளை தகர்த்து எடுத்தார் ஹோல்டர். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி களத்திலேயே நின்றார் ஓப்பனர் மன்சே. ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் கடைசிவரை விக்கெட்டை விடாமல் மக்லியாட் மற்றும் க்ரிஸ் க்ரீவ்ஸ் உடன் கைக்கோர்த்து 160 என்னும் நல்ல டோட்டலை அமைத்து கொடுத்தார் மன்சே. 9 பவுண்டரிகள் விளாசிய அவர் 66 ரன்கள் அடித்து அவுட்டாகமல் இருந்தார்.

விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்:

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. சிறப்பாக தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முழுவதும் இளம் வீரர்களாக இருக்கும் அணியில் அனுபவமிக்க வீரர்களான எவின் லெவிஸ், கேப்டன் பூரன் சிறப்பாக பேட்டிங் செய்யாமல்14, 4 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர்.

கடைசிவரை போராடிய ஹோல்டர்:

அணிக்காக கடைசிவரை போராடிய ஜேசன் ஹொல்டர் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 38 ரன்களில் கேட்ச் கொடுத்து இறுதியாக வெளியேறினார். முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டிஸ் அணி. நேற்றைய மேட்சில் இலங்கை அணியை வென்று நமீபியா அணி ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று ஸ்காட்லாந்து அணியும் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com