\
 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி தேர்வு

 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி தேர்வு

 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி தேர்வு
Published on: 

சர்வதேச இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் உள்ளிட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ் தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com