டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
Published on

டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நாளை விளையாடவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 12 பேர் கொண்ட அணியின் பட்டியலை அறிவித்துள்ளார். அதன்படி பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கட் கீப்பர்), ஃபாக்கர் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹஃபீஸ், மாலிக், அசிஃப் அலி, ஷதாப் கான் (துணை கேப்டன்), இமாத் வசீம், ஹாசன் அலி, ஷாஹென் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் ஆடும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இந்தியாவுக்கு எதிரான நாளையப் போட்டியில் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் களமிறங்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. வீரர்கள் யாருக்கும் ஃபிட்னஸ் பிரச்னைகள் வராத பட்சத்தில், வார்ம்-அப் போட்டிகளில் விளையாடும் இதே டீம்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு இந்தியாவின் மும்பையின் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் போட்டிகள் விளையாட பிசிசிஐ மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் உலகக் கோப்பை, சாம்பியன்டிராஃபி, ஆசியக் கோப்பை போன்று ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும். இதன் தொடர்ச்சியாகவே தற்போது 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 24-ஆம் தேதி (நாளை) இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால் இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com