மகளிர் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
20 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
20 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ்சில் வரும் நவம்பர் மாதம் 9 முதல் 24 தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட முதல் 8 அணிகள் என்ற தர வரிசைப்படியும், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யப்படும். மேலும் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் குவலிஃபையர் 1 ஆகிய அணிகள் குரூப் “ஏ” பிரிவிலும் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, பாக்கிஸ்தான், நியூசிலாந்து மற்றும் குவலிஃபையர் 2 அணிகள் குரூப் “பி” பிரிவிலும் உட்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கயானா, சைண்ட் லூசியா, ஆன்டிகுவா ஆகிய இடங்களில் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படுகின்றன.
நெதர்லாந்தில் வரும் ஜூலை மாதம் 7 தேதி முதல் 14 தேதி வரை மகளிர் உலகக் கோப்பைக்கான இறுதி தகுதி போட்டிகள் நடைபெறயுள்ளது. அதில் A பிரிவில் பங்களாதேஷ், PNG (பப்புவா நியூ கினியா), நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ். B பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, உகாண்டா ஆகிய அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெரும் அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பெரும்.
இந்திய அணியின் ஆட்டங்கள்
இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து, பாக்கிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் குவலிஃபையர் 2 அணிகளுடன் நவம்பர் 9ஆம் தேதி நியூசிலாந்தையும்,11ஆம் தேதி பாகிஸ்தானையும், 15ஆம் தேதி குவலிஃபையர் 2 வையும்,17ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது. மேலும் இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை லீக் ஆட்டத்தில் போட்டிபோட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான வீராங்கனைகளை இந்திய அணி விரைவில் அறிவிக்கவுள்ளது.
இதனைதொடந்து ஐசிசி உலக ட்வென்டி 20 நிகழ்வில் முதன்முறையாக டிசிசன் ரிவிஃயூ சிஸ்டம் (டிஆர்எஸ்)முறை இப்போட்டியில் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி போட்டியில் தோற்றத்தைத் தொடர்ந்து எங்கள் அணி மிகுந்த எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.