ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டாங்க: ஸ்டெயின் வேதனை!

ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டாங்க: ஸ்டெயின் வேதனை!

ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டாங்க: ஸ்டெயின் வேதனை!
Published on

குளோபல் லீக் தொடரை நடத்துவதாக ஆசைக்காட்டி மோசம் பண்ணிவிட்டார்கள் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் வேதனை தெரிவித்துள்ளார்.

8 அணிகள் பங்கேற்கும் குளோபல் லீக் தொடரை நடத்த தென்னாப்பிரிக்க கிரிக்கட் வாரியம் முடிவு செய்திருந்தது. நவம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை இதை நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். இதில் ஒரு அணியை இந்தியாவைச் சேர்ந்த நடிகை பீரீத்தி ஜிந்தாவும், இன்னொரு அணியை நடிகர் ஷாரூக் கானும் வாங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த தொடரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்துள்ளது. 

இதுபற்றி ஸ்டெயினிடம் கேட்டபோது, ‘இந்த போட்டியை தள்ளி வைத்தது இளம் வீரர்களின் நம்பிக்கையை தளர்த்துவிட்டது. இந்த போட்டியின் மூலம் இளம் வீரர்கள் கொஞ்சம் பணம் சம்பாதித்திருப்பார்கள். அதில், அவர்கள் காரோ, வீடோ வாங்கியிருக்கலாம். ஆனால், ‘ஒரு லட்சம் அமெரிக்க டாலர் தர்றோம்’ என்று ஆசைக் காட்டிவிட்டு அடுத்த சில வாரங்களில், ‘அதெல்லாம் தர முடியாது’ என்று சொன்னால் எப்படியிருக்கும்? அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போது. டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களை எந்த நாட்டில் இருக்கும் அணியும் ஒப்பந்தம் செய்யும். ஏனென்றால் அவர் சிறந்த வீரர் என்பதை உலகம் அறியும். இதே போல இளம் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக, குளோபல் லீக் இருந்திருக்கும். அது கிடைக்காமல் போனது வருத்தம்தான்’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com