“என்னை பொறுத்தவரை நீங்கள்தான் தொடர் நாயகன்”- நடராஜனை புகழ்ந்த பாண்ட்யா!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் இடம்பெற்றுள்ளார். அதோடு ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய நடராஜன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்காக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். டி20 தொடரை இந்தியா 2-1 என வென்றுள்ளது.
<div id="fb-root"> <script async defer crossorigin="anonymous" src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v9.0" nonce="Lri2sydv">
இந்நிலையில் இந்தத் தொடரில் அபாரமான ஆட்டத்திற்காக தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்ட்யா இந்த விருதுக்கு பொருத்தமானவர் நீங்கள்தான் என நடராஜனை புகழ்ந்துள்ளார். “நடராஜன் இந்த தொடரில் நீங்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தீர்கள். ஆஸ்திரேலியாவின் மாறுபட்ட கண்டீஷனிலும் உங்களது அறிமுக தொடரிலேயே உங்களது திறனை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். இது உங்களது கடின உழைப்பின் வெளிப்பாடு. என் பார்வையில் நீங்கள் தான் இந்த தொடரின் நாயகன் அண்ணா. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என சமூக வலைத்தளத்தில் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக இந்திய அணி 17 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா வென்றிருந்தார்.