விளையாட்டு
களமிறங்கிய முதல் சர்வதேச டி20: 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை மிரட்டிய நடராஜன்
களமிறங்கிய முதல் சர்வதேச டி20: 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை மிரட்டிய நடராஜன்
இந்திய அணிக்காக தனது முதல் டி20 போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வரும் நடராஜன் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். சேலம் - சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக களம் இறங்கி விளையாடினார்.
இந்நிலையில் இன்றைய டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 162 ரன்களை இலக்காக விரட்டி வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் பிக் ஷோவான மேக்ஸ்வெல்லை LBW முறையில் வீழ்த்தினார் நடராஜன். தொடர்ந்து கிரீஸில் செட்டாகி 34 ரன்களை குவித்த பேட்ஸ்மேன் ஷார்டையும் வீழ்த்தி இருந்தார். தொடந்து ஸ்டார்க்கையும் க்ளீன் போல்ட் செய்துள்ளார்.
4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து 30 ரன்களை கொடுத்துள்ளார் நடராஜன். முதல் போட்டியே அவருக்கு மேட்ச் வின்னிங் இன்னிங்சாக அமைந்துள்ளது.