“ஹன்விகா.. எங்களது சின்ன தேவதை"... 6 மாத மகளை நினைத்து ட்விட்டரில் உருகிய நடராஜன்
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மகள் குறித்து ஒரு உருக்கமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
’
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட செய்தியில், “ஹன்விகா.. எங்களது சின்ன தேவதை.. என்னுடைய எல்லாத் திட்டங்களுக்கு இடையே அவள் பிறந்தாள். எதிர்பாரதவிதமாக நான் அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்தேன். இன்று அவள் பிறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. என்னுடைய எல்லாத்திட்டங்களை தாண்டி இன்று நான் அவளுடன் இருக்கிறேன்... நான் அவளுடன் இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கை கணிக்க முடியாததாய் இருக்கிறது. இந்தத் தருணங்கள் விலை மதிக்க முடியாதவை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். காயம் ஏற்பட்ட போதும் அவர் ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து விளையாடினார். இதனால் காயம் பெரியதாக மாறியது. இந்த வருட ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.