3rd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு - இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு

3rd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு - இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு

3rd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு - இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
Published on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு மாற்றாக நடராஜன் விளையாடுகிறார். 

இந்த தொடரில் இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை உறுதி செய்யும் மூன்றாவது போட்டி நடைபெறுகிறது. 

“நாங்கள் பந்து வீசவே விரும்பினோம். இருந்தாலும் டாஸ் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. கடந்த முறையை விடை கூடுதலாக 30 ரன்களுக்கு மேல் டார்கெட் செட் செய்ய உள்ளோம். அதன் மூலம் எதிரணிக்கு எங்களது பந்து வீச்சாளர்கள் தொந்தரவு கொடுப்பார்கள். டெஸ்ட், டி20 தொடர்களில் பின்தங்கிய நிலையில் தான் வென்றோம். அதே போல இதையும் வெல்வோம்” என இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணியில் டாம் கரணுக்கு மாற்றாக மார்க் வுட் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com