மணீஷ் பாண்டேவுக்கு திருமண பரிசாக அமைந்த முஷ்டாக் அலி கோப்பை அபார வெற்றி

மணீஷ் பாண்டேவுக்கு திருமண பரிசாக அமைந்த முஷ்டாக் அலி கோப்பை அபார வெற்றி
மணீஷ் பாண்டேவுக்கு திருமண பரிசாக அமைந்த முஷ்டாக் அலி கோப்பை அபார வெற்றி

சையது முஷ்டக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி கர்நாடகா த்ரில் வெற்றி பெற்றது.

சூரத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த கர்நாடக அணி, 20 ஓவர்களில் 5‌ விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. கேப்டன் மனீஷ் பாண்டே 45 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ரோஹடன் கடன் 35 ரன்களும், கே.எல்.ராகுல் 22 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த தமிழ்நாடு முதலில் தடுமாறினாலும், விஜய் சங்கர் மற்றும் பாபா அபர்ஜித் இணை அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார். 

ஐந்தாவது பந்தில் விஜய் சங்கர் ரன் அவுட் ஆன நிலையில், கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அதை எதிர்கொண்ட முருகன் அஷ்வின் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில், கர்நாடகா ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கர்நாடக கேப்டன் மணீஷ் பாண்டேவுக்கு இன்று திருமணம் நடைபெறும் நிலையில், இந்த வெற்றி அவருக்கு சிறப்பானதாக அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com