அஞ்சலிக்காக வெற்றியை தியாகம் செய்த நீச்சல் வீரர்
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தியதால், உலகச் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ஸ்பெயின் வீரர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
வெற்றியை தியாகம் செய்து, பார்சிலோனா தாக்குதலில் உயிரிழவர்களுக்காக பெர்னாண்டோ ஆல்வரேஸ் அஞ்சலி செலுத்திய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றால் ஏற்படும் மகிழ்ச்சியை விட, இது திருப்தி அளிப்பதாக பெர்னாண்டோ ஆல்வரேஸ் கூறியுள்ளார். பார்சிலோனாவில் கடந்த வாரம் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில், ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என ஸ்பெயினின் பெர்னாண்டோ ஆல்வரேஸ் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், போட்டியில் மற்ற வீரர்கள் நீந்தும்போது, பெர்னாண்டோ ஆல்வரேஸ் மட்டும் தன்னந்தனியாக, மவுன அஞ்சலி செலுத்தி, ரசிகர்களின் இதயத்தை வென்றார்.