இந்திய வீரர் சுஷில்குமாருக்கு தங்கப்பதக்கம்

இந்திய வீரர் சுஷில்குமாருக்கு தங்கப்பதக்கம்

இந்திய வீரர் சுஷில்குமாருக்கு தங்கப்பதக்கம்
Published on

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

21ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் மாகாணத்தின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைப் பெற்று வருகிறது. ஏப்ரல் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ள இந்தத் தொடரில் 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6.600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்திய அணி பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. 


 
இன்று நடைபெற்ற மல்யுத்தப்போட்டியில், ஆடவர்  74 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர்  சுஷில்குமார் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதுவரை இந்தியா 29 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இதில் 14 தங்கப் பதக்கமும், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கம் அடங்கும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com