கே.எல்.ராகுலுக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் சேர்ப்பு!

கே.எல்.ராகுலுக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் சேர்ப்பு!
கே.எல்.ராகுலுக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் சேர்ப்பு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் பிரதான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த கே.எல்.ராகுல், இடது தொடையில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக விலகி உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

முதல் டெஸ்ட் கான்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி விளையாடாத காரணத்தினால் அணியை ரஹானே வழிநடத்துகிறார். 

சூர்யகுமார் யாதவுக்கு ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் போட்டியாக அமையும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com