ஜிம்பாப்வே அணியை நாலா புறமும் சுழன்று அடித்த Mr.360° சூர்யகுமார்! இந்தியா அபார வெற்றி!

ஜிம்பாப்வே அணியை நாலா புறமும் சுழன்று அடித்த Mr.360° சூர்யகுமார்! இந்தியா அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணியை நாலா புறமும் சுழன்று அடித்த Mr.360° சூர்யகுமார்! இந்தியா அபார வெற்றி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவின் Mr.360°!

கிரிக்கெட் உலகில் 360° என அறியப்படுபவர் தென்னாப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்தான். பந்தினை எல்லா திசையில் விளாசித்தள்ளி ரன்களை குவிப்பதில் ஏபிவி வல்லவர் என்பதால் அவருக்கு 360° என்ற பட்டப்பெயர் சேர்ந்து கொண்டது. அவரது வரிசையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய அதிரடியாக பேட்டிங்கால் எதிரணி திணறடித்து வருகிறார் சூர்யகுமார்.

1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 186 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற மைல்கல்லை சூர்யகுமார் எட்டியுள்ளார். நடப்பு ஆண்டில் 22 போட்டிகளில் விளையாடி அவர் 1026 ரன்களை எட்டியுள்ளார். அவர் இந்த ஆண்டில் மட்டும் ஒரு சதம் மற்றும் 9 அரைசதம் விளாசியுள்ளார்.

உலக அளவில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 1326 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ரிஸ்வான் கடந்த ஆண்டு இந்த ரன்களை அடித்து இருந்தார். குரூப் 2 பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடிக்கும் என்பதால் நடப்பு உலகக் கோப்பை நிச்சயம் இரண்டு போட்டிகளில் விளையாடும். இத்துடன், இந்த வருடத்தில் நியூசிலாந்து அணியுடன் நவம்பர் 18 முதல் 3 டி20 போட்டிகள் விளையாட உள்ளன. அதிலும் நிச்சயம் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைக்கும் அப்படி கிடைத்தால் ரிஸ்வானை முந்தும் வாய்ப்பு அவருக்கு நிச்சயம் கிடைக்கும்.

அதிவேக அரைசதம் - 4வது இந்திய வீரர்

இன்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிவேகமாக அரைசதம் அடித்த நான்காவது வீரர் என்ற இடத்திற்கு முன்னேறியுள்ளார். யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் (2007) விளாசி முதலிடத்தில் நீடிக்கிறார். அப்போது 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளசி இருந்தார். 18 பந்துகளில் அரைசதம் விளாசி கே.எல்.ராகுல் இரண்டாம் இடத்தில் உள்ளார். யுவராஜ் சிங் 20 பந்துகளில் அரைசதம் விளாசி மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

சூர்ய குமாரை பாராட்டிய சேவாக்!

சூர்யகுமார் அரைசதம் விளாசியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டர்க்காரர் வீரேந்திர சேவாக் அவரை பாராட்டியுள்ளார். சேவாக் தனது ட்விட்டர் பதிவில், “சூர்ய குமார் என்றாலே ஸ்பெஷல், சூர்யகுமார் ஒரு லிமிட்லெஸ்.. என்ன ஒரு அபாரமான ஸ்டப்.. எப்பொழுதும் உங்கள் ஆட்டம் ஒரு ட்ரீட்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Sky is special.
SKY is limitless…
Brilliant stuff. Always a treat to watch.#SuryakumarYadav pic.twitter.com/EsZ7vG4gcG
— Virender Sehwag (@virendersehwag) November 6, 2022

115 ரன்னில் சுருண்ட ஜிம்பாப்வே

187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 115 ரன்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்ரிக்க அணி தோல்வி அடைந்த போதே இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

ஜிம்பாப்வே அணி தரப்பில் ரியான் பர்ல் 35 (22), சிகண்டர் ரஸா 34 (24) ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்தனர். புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், அக்ஸர் பட்டேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com