“சொந்த வீரர்கள் போனால் போகட்டும் என நினைக்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்” டானிஷ் கனேரியா !

“சொந்த வீரர்கள் போனால் போகட்டும் என நினைக்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்” டானிஷ் கனேரியா !

“சொந்த வீரர்கள் போனால் போகட்டும் என நினைக்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்” டானிஷ் கனேரியா !
Published on

நியூசிலாந்துக்காக விளையாட சூர்யகுமார் யாதவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டபோதும் அவருக்கு பக்கபலமாக நின்று பிசிசிஐ போகவிடாமல் செய்தது ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்படியில்லாமல் சொந்த வீரர்கள் மீது அக்கறையில்லாமல் இருக்கிறது என்று முன்னாள் வீரர் டானிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் "பாகிஸ்தான் கிரிக்கெட் பல இளம் வீரர்களை இழந்து வருகிறது. 24 வயதான சமி அஸ்லாம் பாகிஸ்தானுக்காக 13 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அவர் தொடர்ந்து சிறப்பாகவும் விளையாடினார். ஆனால் அவருக்கு அநியாயம் இழைக்கப்பட்டது. அவருக்கு ஷான் மசூத், இமாம் உல் ஹக் போல வாய்ப்பு வழங்கப்படவில்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய வீரர்களை தக்க வைக்க முயலாமல் நாட்டைவிட்டு சென்றால்போதும் என நினைக்கிறது. சூர்யகுமார் யாதவ்க்கு நியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ் தங்கள் நாட்டுக்காக விளையாட வருமாறு அழைப்புவிடுத்தார். ஆனால், பிசிசிஐ பக்கபலமாக நின்று அவர் இந்தியாவை விட்டு செல்லாத வகையில் பார்த்துக்கொண்டது" என்றார் டானிஷ் கனேரியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com