"சூர்யா ஒரு அற்புதமான நடிகர்" முன்பே சொன்ன தோனி !
சூர்யா ஒரு அற்புதமான நடிகர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பேசிய வீடியோ இன்று மீண்டும் வைரலாகி வருகிறது.
நடிகர் மட்டுமல்ல: தயாரிப்பாளர், சமூக ஆர்வலர், கல்வியாளர் என பன்முகத் தளங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் சூர்யா தனது 45-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் சூர்யாவின் அருமை பெருமைகளை பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடிகர் சூர்யா குறித்து சில ஆண்டுகள் முன்பு பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதில் "சூர்யா என்னுடைய விருப்பமான நடிகர்களில் ஒருவர். முதலில் நான் சிங்கம் திரைப்படத்தை இந்தியில்தான் பார்த்தேன். பின்பு நண்பர்கள் தமிழில் வெளியான "சிங்கம்" திரைப்படத்தை பார்க்க சொன்னார்கள். அது ஹிந்தி பாதிப்பை விட நன்றாக இருக்கும் என்றார்கள். அப்போது நான் சர்வதேச விமானத்தில் சென்றுக்கொண்டிருந்த போது சூர்யா நடித்த சிங்கம் படத்தை "சப்-டைட்டில்"களுடன் பார்த்தேன்" என்றார்.
மேலும் "அப்போதுதான் தெரிந்தது சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பது. அவருடைய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்திருந்தது, அற்புதமான நடிகர். பின்பு அவரின் கஜினி திரைப்படத்தையும் பார்த்தேன். ஒரு முறை மும்பையில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தபோது சூர்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருவரும் சந்தித்தோம்" என தோனி தெரிவித்திருந்தார்.