தாறுமாறு பிட்ச்-சால் வீரர்கள் காயம்: நடுவர்கள் ஆலோசனை!

தாறுமாறு பிட்ச்-சால் வீரர்கள் காயம்: நடுவர்கள் ஆலோசனை!

தாறுமாறு பிட்ச்-சால் வீரர்கள் காயம்: நடுவர்கள் ஆலோசனை!
Published on

ஆடுகளத்தின் தன்மை குறித்து சர்ச்சை எழுந்ததால் தென்னாப்பிரிக்கா- இந்திய இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் முன்னரே முடித்துக் கொள்ளப்பட்டது. ‌

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.  
முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தது.  2வது இன்னிங்ஸில் இந்திய அணி, 247 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 25 ரன்களும், கேப்டன் கோலி 41, ரஹானே 48, புவனேஷ்குமார் 33, ஷமி 27 ரன்கள் எடுத்தனர். 

இதையடுத்து தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 17 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. 
பந்து தாறுமாறாக எகிறிய நிலையில், பும்ரா வீசிய பந்து தென்னாப்பிரிக்க தொடக்‌க ஆட்டக்காரர் டீன் எல்கரின் நெற்றியை பதம் பார்த்தது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் நடுவர்கள் ஆடுகளம் குறித்து விவாதித்தனர். பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் போட்டி நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. 

ஆனால் இதே ஆடுகளத்தில் இந்திய வீரர்களுக்கும் ரபாடா வீசிய பந்தில் காயம் ஏற்பட்டது. முரளி விஜய், விராத் கோலி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால் இதுபற்றி இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் மோசமான ஆடுகளம் காரணமாக இன்றைய போட்டி தொடர்ந்து நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. நேற்று இரவு நடுவர்களுடன் ஆலோசித்த பின் போட்டியை தொடர முடிவு செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com