\
’என் இளவரசியே...’ வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் அந்த செல்பி!

’என் இளவரசியே...’ வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் அந்த செல்பி!

’என் இளவரசியே...’ வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் அந்த செல்பி!
Published on

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது மகளுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். இது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தார். யோ யோ டெஸ்ட்டில் தேர்வாகாததுதான் காரணம் என்று கூறப்பட்டது. பிறகு அதில் தேர்வான சுரேஷ் ரெய்னா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 போட்டியில் சேர்க்கப்பட்டார். அதில் அதிரடியாக விளையாடினார். 

இந்நிலையில் ட்விட்டரில் அவர் செல்பி புகைப்படம் ஒன்றை நேற்று வெளியிட்டார். தனது மகள் கிரேசியாவுடன் இருக்கும் அந்தப் புகைப்படத்தின் கீழே, ‘நீதான் என் இளவரசி. என் வாழ்க்கை உன்னைச் சுற்றியே இருக்கிறது. என் வாழ்க்கை, தேவதை கதை போல் இருப்பதாக நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அந்தப் புகைப்படத்தை ஏராளமானோர் ரசித்து ஷேர் செய்துள்ளனர். அவருக்கும் குழந்தைக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com