விளையாட்டு
கார் டயர் வெடித்தது: உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா
கார் டயர் வெடித்தது: உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா
கார் டயர் திடீரென்று வெடித்த விபத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கான்பூரில் நடக்கும் துலீப் டிராபி போட்டியில் பங்கேற்கிறார். இந்தப் போட்டி நாளை நடக்கிறது. இதற்காக, காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு ரேஞ்ச் ரோவர் சொகுசு காரில் அவர் நேற்று வந்து கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் கார் எட்டாவா என்ற இடத்தின் அருகே வந்துகொண்டிருந்தபோது, காரின் டயர் திடீரென வெடித்தது.
அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் ஏற்படாததால் சுரேஷ் ரெய்னா உயிர் தப்பினார்.
காரில் மாற்று டயர் இல்லாததால், சாலையிலேயே ரெய்னா காத்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கூறினர். இதையடுத்து போலீசார் மாற்றுக் கார் மூலம் கான்பூருக்கு ரெய்னாவை அனுப்பி வைத்தனர்.