சுரேஷ் ரெய்னாவுக்கு விருது வழங்கியது மாலத்தீவு அரசு: என்ன விருது தெரியுமா?
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு மாலத்தீவு அரசு 'ஸ்போர்ட்ஸ் ஐகான்' விருது வழங்கி கவுரவித்தது
மாலத்தீவு அரசு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தாண்டு “ஸ்போர்ட்ஸ் ஐகான்” விருதுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, முன்னாள் ரியல் மாட்ரிட் வீரர் ராபர்டோ கார்லோஸ், ஜமைக்கா ஸ்ப்ரிண்டர் அசஃபா பவல், இலங்கையின் முன்னாள் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா உட்பட 16 சர்வதேச விளையாட்டு வீரர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பெயர்களை பரிசீலித்து , சுரேஷ் ரெய்னாவுக்கு “ஸ்போர்ட்ஸ் ஐகான்”விருதை வழங்கியது மாலத்தீவு அரசு.
சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் வெற்றிக்கு உதவியதற்காக அறியப்பட்டவர். மேலும் 4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலை சிறந்த வீரராக திகழ்ந்தவர். டி20 கிர்க்கெட்டில் 6000 மற்றும் 8000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் மற்றும் ஐபிஎல்லில் 5,000 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் ரெய்னா தான். சாம்பியன்ஸ் லீக் டி20 வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தவர் சுரேஷ் ரெய்னா!