கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பவுலிங் தேர்வு

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பவுலிங் தேர்வு
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பவுலிங் தேர்வு

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.

2022 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் வலுவான நிலையில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

மறுபுறம் சன்ரைசர்ஸ் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய அந்த அணி, அடுத்த இரு ஆட்டங்களையும் தொடர்ச்சியாக வென்று அசத்தியது. தற்போது ஹாட்ரிக் வெற்றியைக் குறிவைத்து களமிறங்குகிறது சன் ரைசர்ஸ். டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆரோன் பிஞ்ச், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, உமேஷ் யாதவ் மற்றும் அமன் ஹக்கீம் கான்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், ஜெகதீஷா சுசித், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com