‘1 ரன்னில் சஞ்சுவின் அரை சதம் போச்சே’ - சுருண்டது ராஜஸ்தான்!

‘1 ரன்னில் சஞ்சுவின் அரை சதம் போச்சே’ - சுருண்டது ராஜஸ்தான்!
‘1 ரன்னில் சஞ்சுவின் அரை சதம் போச்சே’ - சுருண்டது ராஜஸ்தான்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 125 ரன்களில் சுருண்டது.

ஐபிஎல் போட்டியில் 4வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

அந்த அணியில் 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் மேலும் ஒரு ரன் எடுக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்து அரை சதத்தை தவறவிட்டார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகியுள்ளனர். ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்குமார் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் 126 ரன்கள் என்ற இலக்கு ஹைதராபாத் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com