ஐபிஎல்: சுனில் நரைன் புதிய சாதனை

ஐபிஎல்: சுனில் நரைன் புதிய சாதனை
ஐபிஎல்: சுனில் நரைன் புதிய சாதனை

ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்களை கடந்த முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சுனில் நரைன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேன் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்களை கடந்த முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லலித் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் இச்சாதனைக்கு சொந்தக்காரரானார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ, மும்பை அணியின் முன்னாள் வீரர் மலிங்காவை தொடர்ந்து 150 விக்கெட்களை கடந்த மூன்றாவது வெளிநாட்டு வீரராகவும் சுனில் நரேன் இணைந்துள்ளார். அதேபோல் ஐ.பி.எல்.இல் 150 விக்கெட்களை கைப்பற்றிய 9ஆவது பந்துவீச்சாளராகவும், 6ஆவது சுழல்பந்து வீச்சாளராகவும் நரேன் விளங்குகிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com