
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 164 ரன்களை எடுத்துள்ளது. வார்னர் (28 ரன்கள்), மணீஷ் பாண்டே (29 ரன்கள்), பிரியம் கார்க் (51 ரன்கள்), அபிஷேக் ஷர்மா (31 ரன்கள்) எடுத்திருந்தனர். பிரியம் கார்க் ஓரளவு நிலைத்து நின்று அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனையடுத்து தோனி தலைமையிலான சென்னை அணி 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசிஸியும், வாட்சனும் களம் இறங்கினர். ஆனால் தொடக்க ஆட்டம் விறுவிறுப்பாக அமையவில்லை. இரண்டு ஓவர்களின் முடிவில் 4 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்திருந்தது. அப்போது 3ஆவது ஓவரின் 3வது பந்தை புவனேஷ்குமார் வீச போல்டாகி வாட்சன் அவுட்டானார்.
இதையடுத்து களம் இறங்கிய ராயுடுவும் 6வது ஓவரில் நடராஜன் கையில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அதே ஓவரில் நிலைத்து விளையாடிய டுபிளிசிஸ் ரன் அவுட் ஆகியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 9வது ஓவரை அப்துல் சமது வீச கேதர் ஜாதவ் வார்னர் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். தற்போது தோனியும் ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். 11 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.