போதையில் அடிதடி: பென் ஸ்டோக்ஸ், ஹேல்ஸ் நீக்கம்
மதுபான விடுதியில் போதையில் இரண்டு பேரை அடித்து உதைத்ததாக வெளியான வீடியோவை அடுத்து இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மற்றொரு வீரர் ஹேல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி பிரிஸ்டல் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின்னர் மதுபான விடுதிக்கு சென்ற ஸ்டோக்ஸும் ஹேல்ஸும், அங்கு போதையில் இரண்டு பேரை அடித்து உதைத்தனர். ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, ஆஷஸ் தொடருக்கு ஸ்டோக்ஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஸ்டோக்ஸும் ஹோல்ஸும் இரண்டு பேரை தெருவில் வைத்து தாக்கும் வீடியோ, காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பானது. இதனையடுத்து விசாரணை முடியும் வரை சர்வதேச போட்டிகளுக்கு ஸ்டோக்ஸும் ஹேல்ஸும் பரிசீலிக்கப் படமாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.