விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. 18 மாதங்களுக்கு பின் சதம் விளாசினார் ஸ்டீவ் ஸ்மித்!

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. 18 மாதங்களுக்கு பின் சதம் விளாசினார் ஸ்டீவ் ஸ்மித்!
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. 18 மாதங்களுக்கு பின் சதம் விளாசினார் ஸ்டீவ் ஸ்மித்!

18 மாதங்களுக்கு பின் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கொழும்பு சர்வதேச மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 18 மாதங்களுக்கு பின் சதம் விளாசி அசத்தினார். மோசமான பார்மில் சிக்கித் தவித்த ஸ்டீவ் ஸ்மித் தனது கடைசி சதத்தை 2021 ஜனவரியில் சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக விளாசி இருந்தார். அதன்பின் அவருக்கு சதங்கள் கைகூடாமல் போயின.

ஆனால் அவர் தொடர்ச்சியாக அரைசதங்களை விளாசியபோதிலும், அவற்றை சதங்களாக அவரால் மாற்ற முடியவில்லை. குறிப்பாக ஆஷஸ் தொடரில் அடிலெய்டில் 93 ரன்களில் அவர் அவுட்டாக சதம் வெறும் 7 ரன்களில் மிஸ் ஆனது. பாகிஸ்தானின் மைதானங்களில் மூன்று அரை சதங்களை அடித்தார். ஆனால் அவர் சதம் அடிக்காதது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது நெடுநாள் சத வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார் ஸ்டீவ் ஸ்மித். 87 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளாசிய 28வது சதம் இதுவாகும். இதன்மூலம் 27 டெஸ்ட் சதம் விளாசிய கோலியின் சாதனையை முந்திச் சென்றார் ஸ்மித். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,125 ரன்களை மொத்தமாக அவர் குவித்துள்ளார். இந்த ரன்குவிப்பிலும் கோலியை முந்திச் சென்றார். கோலி ஸ்மித்தை விட 51 ரன்கள் பின் தங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com