'ஏன் இந்த வேலை, நீங்கள் திருந்தவில்லையா ஸ்மித்?' - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

'ஏன் இந்த வேலை, நீங்கள் திருந்தவில்லையா ஸ்மித்?' - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

'ஏன் இந்த வேலை, நீங்கள் திருந்தவில்லையா ஸ்மித்?' - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Published on

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின், கார்ட் எனும் அடையாளத்தை மாற்றிய ஸ்மித்க்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியை ட்ரா செய்தது . இந்திய அணியின் விஹாரி, அஸ்வின் ஜோடி அபாரமாக விளையாடி டெஸ்ட் போட்டியை ட்ராவை நோக்கி இழுத்துச் சென்றது. அதேவேளையில் பண்ட் அதிரடியாக விளையாடி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பண்ட் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும் என்ற நிலையே இருந்தது. இந்நிலையில் ஆஸி வீரர் ஸ்மித்தின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் பதிவாகி வருகின்றன.

பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு ஏற்ப ’கார்ட்’ என்ற அடையாளத்தை ஸ்டெம்புகள் முன்பு கால்களால் குறித்துகொள்வார்கள். இதன் மூலம் அவர்களை பந்துகளை கணிப்பார்கள். அதேபோல் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த ரிஷப் பண்டும் கால்களால் அடையாளத்தை குறித்து வைத்துக்கொண்டு ஆடினார். அப்போது கிடைத்த கேப்பில் உள்ளே நின்ற ஆஸி வீரர் ஸ்மித், தன் காலால் பண்டின் அடையாளத்தை மாற்றினார்.

இதன் மூலம் பண்ட் குழம்புவார் என நினைத்திருப்பார். ஆனால் மறுபடி பேட்டிங் வந்த பண்ட், அம்பயரிடம் சரியாக கேட்டு மீண்டும் தன் அடையாளத்தை இட்டுக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஸ்டெம்ப் கேமராவில் பதிவான நிலையில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

''தந்திரம் செய்து ஸ்மித் வெற்றியை ருசிக்கப் பார்க்கிறார். அவர் இன்னும் திருந்தவில்லை'' என பலரும் கருத்து பதிவிட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள சேவாக், ''பண்டின் அடையாளத்தை மறைக்க முயன்ற ஸ்மித்தின் ட்ரிக் உள்ளிட்ட எல்லா ட்ரிக்குகளையும் இந்திய அணி முறியடித்துள்ளது.இந்திய அணியை நினைத்து பெருமையாக உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் அது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தவறை ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வார்னர், ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com