கிரிக்கெட் ஆடாமல் இருப்பது எனக்கு கடினமானது: அஸ்வின்

கிரிக்கெட் ஆடாமல் இருப்பது எனக்கு கடினமானது: அஸ்வின்

கிரிக்கெட் ஆடாமல் இருப்பது எனக்கு கடினமானது: அஸ்வின்
Published on

கிரிக்கெட் விளையாடாமல் இருப்பாது எனக்கு கடினமான ஒன்று என்று சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தினார் அஸ்வின். இந்தத் தொடருக்கு முன், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் உட்கார வைக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறப்பான பந்துவீச்சு ரெக்கார்டை அஸ்வின் வைத்திருந்தாலும் அவருக்கு வாய்ப்பு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் 7 விக்கெட் வீழ்த்தியது பற்றி அஸ்வின் கூறும்போது, ‘கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது எனக்கு கடினமான ஒன்று. அதனால், கிடைத்த அனைத்துவிதமான கிரிக்கெட் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டேன். இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் ஆடினேன். தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் முடிந்த அளவுக்கு கலந்துகொண்டேன். சென்னையில் சில லீக் போட்டிகளில் பங்கேற்றேன். இதெல்லாம் எனக்கு முக்கியமானது. ஏனென்றால் நான் அந்தப் போட்டிகளில் இருந்துதான் வந்தேன். 

இந்திய அணிக்காக ஆடுவது எப்போதும் எனக்கு சிறப்பானதுதான். நாட்டுக்காக ஆடும்போது ஐந்து விக்கெட் வீழ்த்துவது போல பெருமையானது வேறெதுவும் இல்லை. இந்த இடம் எனக்குச் சிறப்பு வாய்ந்தது. ஆனால், இங்கிலாந்தின் நாட்டிங்காமில் 5 விக்கெட் வீழ்த்தியபோதும் மகிழ்ந்தேன். இரண்டும் ஒன்றை விட குறைந்தது இல்லை’ என்றார்.

அதே நேரம் தென்னாப்பிரிக்க வீரர்கள் டீன் எல்கரையும் டி காக்கையும் பாராட்டினார் அஸ்வின். ’இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். சில ரிஸ்க்கான ஷாட்களை எளிதாக அடித்தார் எல்கர். அவர் சரியான போட்டியாளராக இருந்தார். இது போன்ற சவால்களைத்தான் எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com