மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை எஸ்ஆர்எம் அணி

மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை எஸ்ஆர்எம் அணி

மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை எஸ்ஆர்எம் அணி
Published on

தேனியில் நடந்து வரும் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலை மாணவியர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தேனி எல்.எஸ்.மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் நடத்தும் மாநில அளவிலான மூன்றாவது ஆண்டு கூடைப்பந்தாட்ட போட்டி, தேனி பங்களாமேடு நாடார் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. இன்று காலை மாணவியர் பிரிவிற்கான காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவியர் அணி எதிர்த்து சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மகளிர் அணி களம்கண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலை மாணவியர் அணி , சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி அணியை 33:19 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்ஆர்எம் பல்கலை மாணவியர் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com