பகலிரவு டெஸ்ட் போட்டி - சிறப்பு வர்ணனையாளராகும் தோனி?

பகலிரவு டெஸ்ட் போட்டி - சிறப்பு வர்ணனையாளராகும் தோனி?

பகலிரவு டெஸ்ட் போட்டி - சிறப்பு வர்ணனையாளராகும் தோனி?
Published on

இந்தியா - பங்களாதேஷ் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தோனி விருந்தினராக வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இந்தியாவின் பழமைவாய்ந்த மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டன், புதுமையான டெஸ்ட் போட்டியை நடத்தவுள்ளது. இந்தியா - பங்களாதேஷ் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் மோதவிருக்கும் ‌முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகு‌ம். பகலி‌ரவு டெஸ்ட்டில், சிவப்பு நிற பந்துகளுக்கு பதிலாக பிங்க் நிற பந்துகளே பயன்படுத்தப்படுகின்றன‌. 

பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த புதுமையான டெஸ்ட் போட்டியை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்று யோசித்து வருவதாக தெரிகிறது. இதற்காக அவர் புதுமையான சில முயற்சிகளையும் எடுத்து வருகிறார். இந்நிலையில் போட்டிக்கு சிறப்பு வர்ணனையாளராக தோனியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அழைத்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கங்குலிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் போட்டியின் போது தோனி விருந்தினராக வந்து சிறப்பு வர்ணனையாளராக தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தோனி மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், அனைவரும் வருகை தந்து தங்களது டெஸ்ட் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com