ரோகித் தலைமையிலான இந்திய டி20 அணியில் இடம் பிடிக்காத நட்சத்திர வீரர்கள்

ரோகித் தலைமையிலான இந்திய டி20 அணியில் இடம் பிடிக்காத நட்சத்திர வீரர்கள்
ரோகித் தலைமையிலான இந்திய டி20 அணியில் இடம் பிடிக்காத நட்சத்திர வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அடுத்த வாரம் விளையாட உள்ளது. டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து கோலி விலகியுள்ள நிலையில் ரோகித் ஷர்மாவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் அதிகம் இல்லாததை பார்க்க முடிகிறது. 

விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ஷமி மாதிரியான சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இளம் நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்த வீரர்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம். 

வருண் சக்கரவர்த்தி

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு இந்த தொடரில் இந்தியா சார்பில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அவர் விக்கெட் ஏதும் வீழத்தவில்லை. அதே நேரத்தில் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. 

ஹர்திக் பாண்டியா

நீண்ட நாளாக இந்திய அணி தேடிக்கொண்டிருந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அண்மைய நாட்களாக காயம் காரணமாக பந்து வீசாமல் இருந்தார். இருந்தும் அவர் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்று விளையாடி இருந்தார். அவரது உடற்தகுதி குறித்த கேள்விகளும் எழுப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் அணியில் இடம் பெறவில்லை. 

சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் நல்ல ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருக்கும் வீரர். 187, டி20 இன்னிங்ஸில் 4725 ரன்களை எடுத்துள்ளார். 3 சதம், 29 அரைசதம் இதில் அடங்கும். இருந்தாலும் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பண்ட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல் என நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி விவரம்!

ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், சாஹல், அஷ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ்.

இளமையும், அனுபவமும் அதிகம் கலந்துள்ள இந்த அணியில் ரோகித், ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷன் என ஐந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் கேப்டன் ரோகித் மற்றும் துணை கேப்டன் ராகுல் விளையாடுவது உறுதி. மற்ற மூன்று பேட்ஸ்மேன்கள் சுழற்சி முறையில் அவர்களை தொடர்ந்து விளையாடவே வாய்ப்புள்ளது. 

வரும் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் ஜெய்ப்பூர், ராஞ்சி மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com