விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா மீது சூதாட்ட குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா மீது சூதாட்ட குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலாவுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மற்றொரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டார். 2011 ஆம் அண்டு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்து, சுமதிபாலாவிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கண்ணியமோ, கட்டுப்பாடோ இல்லாத அளவுக்கு இலங்கை வீரர்களை, கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர். இவ்விஷயத்தில் வீரர்களை சொல்லிக் குற்றமில்லை. அனைத்து தவறுகளுக்கும் நிர்வாகிகளே காரணம் என்று ரணதுங்கா குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.