\
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் லீட்ஸ் நகரில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி‌ விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் எந்தவித மாற்றமும் இல்லை. இலங்கை அணியில் ஜீவன் மெண்டீஸ் மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளனர். 

இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, நடப்புத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ‌இலங்கை அணி 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியையும், ‌2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. 

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 74 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி 36 போட்டிகளிலும், இலங்கை அணி 35 போட்டிக‌ளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இரு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com